
இலங்கையில் மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றத்தின் படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் குறைந்த மின்சாரத்தை நுகர்வோருக்கு சலுகைகளும், அதிக மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு கட்டண அதிகரிப்பும் அமலுக்கு வரவுள்ளன. முக்கிய அம்சங்கள்: 180 அலகுகளுக்கு கீழ்: 180 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு கட்டண அதிகரிப்பு ஏற்படாது.
180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு சுமார் 18% வரை கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. புதிய கட்டண விபரங்கள் (மதிப்பீடு): மின்சார பயன்பாட்டு அலகுகளுக்கு ஏற்ப அதிகரிக்கப்படவுள்ள மேலதிக கட்டண விபரங்கள் பின்வருமாறு: மின்சார அலகு (Units)மதிப்பிடப்பட்ட மேலதிக கட்டணம் 180 - 210ரூ. 1,760 210 - 240ரூ. 2,210 270 க்கு மேல் ரூ. 2,600 300 க்கு மேல் ரூ. 3,110 கஇந்த கட்டண விபரங்கள் நுகர்வோர் பயன்படுத்தும் மேலதிக அலகுகளைப் பொறுத்து மாறுபடலாம்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments