
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மரத்தை திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், தனது திருமண உறவு நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்து உள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின், மெர்சிசைடில் உள்ள செப்ஃடனில், எல்டர் என்ற மரத்தை, 37 வயதான கேட் கன்னிங்ஹாம் என்பவர், கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பிறகு, தனது பெயருடன் எல்டர் என்ற பெயரை சேர்த்துக் கொண்டார்.
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, மரத்தை மாலை, டின்சல் மற்றும் பாபிள்களால் போன்றவற்றால் கேட் கன்னிங்ஹாம் அலங்கரித்து உள்ளார்.
கேட் கன்னிங்ஹாம் உண்மையில் இயற்கை ஆர்வலர் ஆவார். இவர் ரிம்ரோஸ் பள்ளத்தாக்கு கன்ட்ரி பார்க் வழியாக புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மரத்தை திருமணம் செய்து கொண்டார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு மரங்களை திருமணம் செய்த மெக்சிகன் பெண்களால் ஈர்க்கப்பட்டதன் காரணமாகவே இந்த முடிவை அவர் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments