Ticker

6/recent/ticker-posts

வக்பு சொத்து அபகரிப்பு வரிசையில் அடுத்து கல்லெலிய பெண்கள் அரபிக் கல்லூரி... ஆட்டம் ஆரம்பம் !


அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்தின் முக்கிய செய்தியாக நாளுக்கு நாள் வக்பு செய்யப்பட்ட சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.


இந்த வகையில் மல்வானை யதாமா அனாதை இல்லம், சுலைமான் மருத்துவமனை, கபூரியா அரபிக் கல்லூரி என வரிசை நீண்டு கொண்டு செல்கின்றது. 

அடுத்து பேசும் பொருளாக  கல்லெலிய பெண்கள் அரபிக் கல்லூரி சந்தைக்கு வந்துள்ளது.

கல்லெலிய அரபிக் கல்லூரியை முஸ்லிம் சமூகத்திற்கு பரிசாக வழங்கிய தனவந்தர்களின் வரிசையில் பிந்தி வந்த சில வாரிசுகள் இது தமக்கு சேர வேண்டிய சொத்தாகும் என  வாதாட தலைப்பட்டுள்ளனர்.

இதன் முதல் கட்டமாக கல்லெலிய அரபிக் கல்லூரிக்கு சொந்தமான
 நிலப்பரப்பை தகர மதில் அமைத்து தனிப்பட்ட சொத்து ( private property) என அடையாளமிட்டு எவரும் உள் நுழையாத வகையில் தடுத்து வைத்துள்ளனர்.

இது வக்பு சொத்துக்களில் ஒன்றான கல்லெலிய பெண்கள் அரபிக் கலாசாலையின்  ஆரம்ப கட்ட அபகரிப்புக்கான ஆட்டத்தின் ஆரம்பமாகும்.

நிலைமை  தொடர்கதையாக மாறுமானால், இன்று முஸ்லிம் சமூகத்திற்கு சொந்தமாக காணப்படும்  பல பாடசாலைகள், அரபிக் கல்லூரிகளின் நிலமை கவலைக்கிடமாக மாறும் என்பதில் ஐய்யப்பட வேண்டியதுள்ளது.

கபூரியாவில் மாணவர்கள் படும் சித்திரவதையை பார்க்கும் போதும்  ஈவிரக்கமற்ற நிர்வாகிகளின் இறை அச்சமற்ற நிலைமையையும் பார்க்கும் போதும் தற்போது நிலைமை  எந்த புத்தினுல் எவ்வாறான பாம்பு இருக்கின்றது என்று சொல்ல முடியாதுள்ளது. 

நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி வாசல்களும் முன் சென்ற சமூக  நல் உள்ளம் கொண்ட தனவந்தர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டவைகளாகும்.

எனவே வேர் ஊன்றியுள்ள இந்தப் புற்று நோய்க்கு உடனடியாக பரிகாரம் வழங்கப்பட்ட வேண்டும். இதற்கு சமூகமும் தலைமைகளும்
 தவறுமாயின் சமூக எதிர்காலம் பூச்சியமாக மாறும்.

அனைத்திலும் மௌனம் காக்குமா ஆன்மீக  அமைப்பு, பொறுப்பான அதிகாரம் பெற்ற அதிகாரிகள் முடங்கிப் போய் இருக்கும் முப்திகள்,
செயல் இழந்திருக்கும்  செயலாளர்கள், வாயாலும் வார்த்தைகளாலும் வானை பிளக்கும் அரசியல் வாதிகள், என்ன செய்யப் போகிறார்கள்?
இது எமது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது.  செவ்வாய் கிரகத்தில் உள்ளது என சொன்னாலும் வியப்பில்லை ?  இதிலும் பொறுத்திருந்து பார்ப்போம்.


பேருவளை ஹில்மி



 



Post a Comment

1 Comments

  1. இலங்கையில் இரண்டு வகையாக சொத்துக்கள் பதியப்படுகின்றன. Public property, private property. அந்த வகையில் எமது கல்லூரி private property. ஏனெனில், அரசாங்கத்துக்குரியதுமல்ல, waqf board இல் பதியப்பட்டதுமல்ல. இப்போது நாடு உள்ள நிலையில் waqf board இல் பதிந்தால் அந்நியர்களின் கண்காணிப்பின் கீழ் கல்லூரி இயங்க வேண்டும். ஏனெனில், புத்தசாசன அமைச்சின் கீழ் தான் waqf board இயங்குகின்றது.

    முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியான எமது கல்லூரியை கபூரியா அரபுக் கல்லூரியுடன் ஒப்பிட முடியாது. கபூரிய்யாவைப் பொறுத்தவரையில் அவர்கள் அஸ்மத் கபூர் என்பவர் பிரச்சினைப்படுத்தும் குறித்த சொத்தை கல்லூரியின் பெயரில் எழுதாமல் குத்தகைக்கே விட்டுள்ளனர் . ஆனால் எமது கல்லூரி சொத்துக்கள் கல்லூரியின் பெயரில் எழுதப்பட்டுள்ளதன. இப்போது நடைமுறையில் உள்ள கல்லூரியின் சட்ட யாப்பின் அடிப்படையில் சில இறுக்கமான நிபந்தனைகளின் அடிப்படையிலே கல்லூரி சொத்துக்கள் விற்க முடியும். கல்லூரியின் பெயர் பாராளுமன்றத்தினல் பதிவு செய்யப்பட்டுள்ளது . கல்லூரி வளாகம் கல்லூரியின் சொத்து. அதே போல் கொழும்பிலே மூன்று stores காணப்படுகின்றன .அவற்றிலும் இந்த அறிவிப்பு இடப்பட்டுள்ளது . இந்த அறிவிப்பிடப்பட்டமைக்கான பிரதான காரணம் சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் நடந்த எதிர்பாறா அசம்பாவிதம். அப்போது கல்லூரியினுள் சில பெற்றோர்களுடன் கல்லூரியுடன் சம்பந்தப்படாத சில நபர்களும் by force ஆக உள் நுழைந்துள்ளனர். அப்போது ஒரு சிலர் தமக்கு மத்தியில் 'இங்கு கத்திக்குத்து தான் நடக்கும்' போன்ற பாரதூரமான வார்த்தைகளைப் பேசிக் கொண்டுள்ளனர். இது கல்லூரியில் இருக்கும் மாணவிகள் மற்றும் ஏனைய ஊழியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வார்த்தையாகும். மேலும் கல்லூரி வலாகத்தினுள் ஒழுக்கமற்ற முறையில் ஒழுங்கான உடை அமைப்பைப் பேணாமல் சில ஆண்கள் உள் நுழைவதாக நிர்வாகத்துக்கு முறைப்பாடுகள் வந்துள்ளன . எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் இப்படியான ஒரு அறிவிப்பு இருந்தால் தான் அத்துமீறி வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்ற வகையில் இவ்வாறான ஒரு நோட்டீஸ் இடப்பட்டுள்ளது.

    Brother, தெளிவான, ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லாமல் பகிரங்கமாக இவ்வாறான விடயங்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஒரு இஸ்லாமிய பல்கலைக்கழகமாக எமது கல்லூரியை தரமுயர்த்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இன் ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் ஒரு காலத்தில் எமது கல்லூரி உலகிலே முதல் தர இஸ்லாமிய பல்கலைக்கழகமாக திகழ அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம். இன் ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் அது சாத்தியப்படும்.

    ReplyDelete