
தெஹிவளையில் அமைந்துள்ள இரு பள்ளிவாசலின் காணி மோசடி தொடர்பாக C I D யின் ஆவண மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.
மேலும் இது தொடர்பாக C I D பலரிடம் விசாரணையை மேற்கொள்ள தயாராகி வருவதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள் பலர் உட்பட ,
முஸ்லிம் கலாச்சார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர், மற்றும் சர்சைக்குறிய வக்பு செத்துக்களுக்கான ஆவனங்களை தயாரித்தாக கூறப்படும், ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தரணி அலிஸப்ரி அவர்களிடம் (முன்னால் அமைச்சர் அல்ல) வாக்குமூலங்களை பெற்றுள்ளதாகவும், மேலும் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள வக்பு சபையின் உயர் அதிகாரிகள் உற்பட பல அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும் அவர்கள் C I D யின் ஆவண மோசடி விசாரணை பிரிவின் விசாரணைக்கு முகம் கொடுக்காது தவிர்ந்து வருவதாகவும் தெரிய வருகின்றது.
மேலும் முஸ்லிம் கலாச்சார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் முஸ்லிம் கலாச்சார அமைச்சு மற்றும், வக்பு சபையின் அதிகாரிகளின் பல ஊழல் மோசடிகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் அவற்றை விசாரிக்க ஆவணங்கள் சேகரிக்கப்படுவதாகவும் தெரிய வருகின்றது.
இலங்கை வக்பு சபை வரலாற்றில் மிகவும் மோசமான, பள்ளிவாசல் சொத்துக்களை தனி நபரின் பெயருக்கு, மற்றும் நிறுவனங்களின் பெயருக்கு மாற்றிக்கொடுத்த மிக மிக ஊழல் நிறைந்ந வக்பு சபை இதுவாகும்.
வக்பு சபையை கலைக்க அரசாங்கத்திற்கு அதிகாரமில்லை என்ற சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி புதிய அரசாங்கம் பதவியேற்றபோதிலும் நடைமுறையில் உள்ள வக்பு சபை புதிய அரசாங்கத்திற்கு வழிவிட்டு ஆதரவளிக்கவில்லை. எதிர்வரும் மார்ச் மாதம் நடைமுறையில் உள்ள வக்பு சபையின் காலக்கெடு முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வேட்டை நிருபர்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments