Ticker

6/recent/ticker-posts

ட்ரம்புக்கு ’இஸ்‌ரேல் அமைதி’ விருது


அமெரிக்க ஜனாதிபதி டொ​னால்ட் ட்ரம்​புக்கு இஸ்‌ரேலின் உயரிய குடிமகன் விரு​தான 'இஸ்‌ரேல் அமை​தி' விருது வழங்​கப்​படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு அறி​வித்​துள்​ளார்.

புளோரி​டா​வில் இரு நாடு​களின் தலை​வர்​களுக்​கும் இடையே நடை​பெற்ற சந்​திப்பை தொடர்ந்து இந்த அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து பெஞ்​சமின் நெதன்​யாகு கூறுகை​யில், “இஸ்​ரேல் அமை​தி விருதை அமெரிக்க அதிபர் ட்ரம்​புக்கு வழங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இஸ்​ரேலிய மற்​றும் யூத மக்​களுக்கு அவர் ஆற்​றிய மகத்​தான பங்​களிப்​பிற்​காக இந்த விருது அவருக்கு வழங்​கப்பட உள்​ளது.

80 ஆண்​டு​களில் முதல் முறை​யாக இந்த விருது இஸ்​ரேலியர் அல்​லாத ஒரு குடிமக​னுக்கு வழங்​கப்​படு​கிறது. மேலும், அமை​திப் பிரி​வில் இந்த விருது வழங்​கப்​படு​வது இதுவே முதல்​முறை” என்​றார்.

tamilmirror

 


Post a Comment

0 Comments