Ticker

6/recent/ticker-posts

ஊழல்வாதியான வக்பு சபை செயலாளர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும்


வக்பு சபையின் காலம், கடந்த 11ஆம் திகதியடன் முடிவடைந்தது. இதன் இறுதித் தினம் கலாட்டாவுடன் முடிவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் வக்புசபையில் நடந்த பெருந்தொகையான ஊழல்களுக்கு முதல் காரணமாக இருந்தவர் வக்பு சபையின் செயலாளர் என்பதற்கு தெளிவான, போதுமான ஆதாரங்கள் உள்ளது.

வக்பு சபையை சுத்தம் செய்ய முற்படும் அதே வேலை, தற்போது உள்ள செயலாளரை அந்தப் பதவியில் வைத்து வக்பு சபையை சுத்தம் செய்வதில்
எந்தவித அர்த்தமுமில்லை.

வக்பு சபையில் நடந்த அத்தனை ஊழல்களிலும் இவர் சம்பந்தப்பட்டுள்ளார்.

தற்போது வக்பு சபையில் ஏராளமான  பள்ளிவாசல்களின் பைல்கள் இல்லை. பெருந்தொகையான ஆவணங்கள் இவரது காலப்பகுதியில் காணாமல் போயின.

வக்பு சபையில் இவரது பொறுப்பில் இருந்த ஆவணங்கள் காணாமல் போனவை தொடர்பாக இவருக்கு எதிரான முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் இவர் மீது உள்ளது.

வக்பு சபை விசாரணைகளின் போது பிரச்சனைப் பட்டுள்ள இரு சாராருக்கும் விசாரணைக்காக கடிதங்களை அனுப்பிவிட்டு,குறிப்பிட்ட திகதிக்கு முதல் தனக்கு சாதகமான சாராரை மாத்திரம் வரவழைத்து, விசாரணையை நடத்தி ஒரு பக்கத் தீர்ப்பு வழங்கிய சம்பவங்கள் பல உள்ளன.
மேலும் விசாரணைக்காக கடிதங்களை அனுப்பும் போது தனக்கு சார்பான குழுவினருக்கு நேர காலத்தோடு கடிதங்களை அனுப்பிவிட்டு, எதிர்தரப்புக்கு விசாரணை திகதி  அன்று அல்லது பின்பாக, அல்லது விசாரணைக்கு சமூகமளிக்க முடியாத நிலையில், குறிப்பிட்ட சில மணித்தியாலங்களில் கடிதங்கள் அனுப்பியமை.விசாரணைக்கு ஒரு சில நிமிடங்களுக்கு முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்கள் விடயத்தை விசாரணைக்கு எடுக்கப் போகிறோம் , உடனடியாக சமூகம் தரவும் என தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அறிய கொடுத்தமை, இவ்வாறு கடிதங்களை அனுப்பியும், தொலைபேசி அழைப்பு விடுத்தும், ஒரு சாராரை நெருக்கடிக்கு உள்ளாக்கி ஒரு பக்க தீர்ப்பு வழங்கிய சம்பவங்கள் ஆதாரங்களுடன் உள்ளன.
பள்ளிவாசல் தொடர்பான பிரச்சனைகளை ஆதாரபூர்வமான ஆவணங்களுடன் சபைக்கு அனுப்பிய போது, விசாரணைக்காக அனுப்பிய ஆதாரங்களில் சிலவற்றை அதிலிருந்து அகற்றி விட்டு,மறுதரப்புக்கு சார்ப்பான ஆவணங்களை மாத்திரம் விசாரணைக் குழுமுன் சமர்ப்பித்து, குறிப்பிட்ட தரப்புக்கு சாதகமான முடிவுகளை வழங்கிய சம்பவங்கள் ஏராளமாக உள்ளன.

பள்ளிவாசல் பிரச்சனைகளை எழுத்து மூலம் வக்பு அறிவிக்கும் போது, அந்த ஆவணங்களை அடுத்த நிமிடமே எதிர்தரப்புக்கு வழங்கி லஞ்சங்களுக்காக மோசமாக நடந்து கொண்ட சம்பவங்கள் பல உள்ளன.
இவை பற்றி விசாரணை குழுவிடம் வினவும்போது, அவர்களிடமிருந்து வரக்கூடிய பதில், எமக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது, செயலாளர் விசாரணைக்குரிய ஆவணங்களை இந்த திகதியில் எங்கள் முன் சமர்ப்பித்தார். அதன்போது ஒரு தரப்பினரே விசாரணைக்கு ஆஜராக இருந்தனர். எனவே அந்தத் தரப்பை விசாரித்து நாங்கள் தீர்ப்புகளை வழங்கினோம் எனக் கூறுவார்கள்.

சில விசாரணைகளின் போது, ஒரு தரப்பால் தம்மால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என தகுந்த ஆதாரங்களை முன்வைத்தும்,  அதாவது உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்களை முன்வைத்தும், அவற்றைப் பொறுப்பெடுத்தாது ஒரு தரப்பினை மாத்திரம் கருத்தில் கொண்டு ஒரு  பக்க தீர்ப்பு வழங்கிய சம்பவங்களும் உள்ளன.

இத்தனை அட்டூழியங்களையும் முழு வக்பு சபையும் சேர்ந்து திட்டமிட்டு செய்தது. இதன் பங்குகள் அத்தனை பேருக்கும் சென்றடைந்தன.

இருந்தாலும் கடந்த காலங்களில் வக்பு சபையில் நடந்த அட்டூழியங்களில்,  மிகக் கூடுதலான அட்டூழியங்கள்
இவர் திட்டப்மிட்டபடியே நடந்தது. 

எனவே குறிப்பிட்ட செயலாளரை அந்தப் பதவியில் வைத்துக்கொண்டு. வக்பு சபையை சுத்தம் செய்வது என்பது ஒரு நகைச்சுவைக்குறிய காரணமாகும்.

சில தினங்களுக்கு முன் ,இடைநிறுத்தப்பட்ட பள்ளிவாசல் நம்பிக்கையாளர் ஒருவரினால், காரியாளையத்தில் வைத்து இவர் தாக்கப்பட்டதாகவும் உறுதியான தகவல்கள் உள்ளன. 

ஆக வக்பு சபை சுத்தம் செய்வது என்பது அதில் உள்ள அத்தனை ஊழல்வாதிகளும் அதிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

இன்னும் பல ஊழல் அதிகாரிகள் சம்பந்தமாக தகவல்கள் உள்ளது காலப்போக்கில் இவை அத்தனையும் வெளியில் கொண்டுவரப்படும்.

வேட்டை நிருபர்

 


Post a Comment

0 Comments