
புதிய அரசாங்கங்கள் பதவியேற்கும் போது, சபைகளுக்கும், கூட்டுத்தாபனங்களுக்கும் அரசியல் அதிகாரங்களால் அமர்த்தப்படும் அரசியல் பதவிகளில் அமர்தப்பட்டவர்கள், அவைகளில் இருந்து ராஜினாமா செய்து, புதிய அரசாங்கத்துக்கு நிர்வாகத்தை ஒப்படைத்து, புதிய அரசாங்கத்துக்கு நிர்வாகம் செய்ய ஒத்துழைப்பது தொடர்ந்து வரும் ஒரு வழிமுறையாகும்.
ஆனால் கடைசியாக இருந்த வக்பு சபை உறுப்பினர்கள், வக்பு சபையை கலைக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்ற சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தியும், பதவியேற்று மூன்று மாதங்களில் அரசாங்கம் வீட்டுக்குப் போகும் என்று, காற்றில் கரையவிடப்பட்ட காதுக்கு இனிய காவியங்கள், சபை உறுப்பினர் சிலரின் காதுக்கு விருந்தாகியதால், எம்மை வீட்டுக்கு அனுப்பினால் அரசாங்கத்திற்கு எதிராக வழக்காடுவோம் என, அரசாங்கம் வீழ்வதை எதிர்பார்த்து, பலாத்காரமாக தங்கள் பதவிகளில் தங்கி இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பில் இடி விழவே கடந்த 11 ஆம் திகதியுடன் அவர்களின் சீட்டுக் கிழிந்தது.
ஆனால் அதற்காக இந்த அரசு இன்னல்களை இன்னல்களைக் கொடுத்து அவர்களை பழி வாங்கவில்லை.
கடந்த கால வக்பு சபையில் அவர்களுக்கு
கிடைத்த வரப்பிரசாதங்கள், லஞ்சங்கள், பதவிகளை
வைத்து அவர்கள் உழைத்த உழைப்புகள், அத்தனையும் அவர்களின் பதவியை துறந்து போவதற்கும் அவர்களுக்கு தடையாக இருந்தது.
இதற்கு மத்தியில் கடந்த 11ஆம் திகதி வக்பு சபையின் கடைசி நாள் என்பதால் இறுதித் தினத்தை கேக் வெட்டி தேநீர் அருந்திக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பல பள்ளிவாசல்களின் நிர்வாகநிர்வாகங்கள், நிர்வாகம் சம்பந்தமாகவும், ஊழல்கள் சம்பந்தமாகவும் வக்பு சபையிடம் இவை பற்றி பேசுவதற்காக நாட்டின் பல பகுதி பள்ளிவாசல்களில் இருந்தும் 11 ஆம் திகதி அன்று வக்பு சபையை நோக்கி வந்திருந்தனர்.
இதனிடையே பள்ளிவாசல்களில் இருந்து வந்த மக்களுக்கும் கடந்த வக்பு சபை உறுப்பினர்களுக்கும் இடையில் சில விடயங்களில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சபை உறுப்பினர்கள், உன்னாள் வந்த வினை தான், என்னால் வந்த வினைதான், அவர் செய்த வேலை, இவர் செய்த வேலை என தங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளவே ஒருவர் கையில் இருந்த பைல்கள் மற்றவர் முகத்தை நோக்கி பறந்து பதம் பார்த்தது.
சபையில் நடந்த ஊழல்களால் பலர் தற்போது CID , SCIB போன்றவற்றின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், நீ செய்த ஊழல், நான் செய்த ஊழல் என சூடான வாதங்களும், வார்த்தைகளும் சபையினுள் தான்டவமாடின.
இதற்கு மத்தியில் மதரசாவில் பச்ச தண்ணியும் குடிக்காத நேர்மையானவர் என social meadia வில் வலம் வந்த ஒரு மெளலவி, நாவலை பள்ளிவாசல் சொத்துக்களை நிறுவனம் ஒன்றின் பேரில் மாற்றுவதற்காக, வக்பு சபை உறுப்பினர் ஒருவருக்கு கார் ஒன்றை லஞ்சமாக வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இச்சந்தர்ப்பத்தில் இது தொடர்பான தகவல்களும் உண்மைகளும்,வப்பாட்டியும் வப்பாட்டியும் நடு வீதியில் நடுவீதியில் வாய்ச் சண்டை கதை யாக மாறவே,
அன்றைய தினம், தருணம் பார்த்து ஒருவர் தன் வேலையாக வக்பு சபைக்கு வந்த போது, நீதான் என்னை காட்டிக் கொடுத்தாய் என காரை இலஞ்சமாக பெற்றவர், அவரின் மீது பாய்ந்த போது,நிலைமை மேலும் மோசமடைந்து சொற் பிரயோகங்கள் சிவப்பு கோட்டை தாண்டியது.
இவ்வாறு வழங்கப்பட்ட காரை, லஞ்சம்
வழங்கிய, மதரஸாவில் பச்சைத்
தண்ணியும் குடிக்காதவர், தன் வழக்கில் கப்பல் கவிழ்ந்ததால், சில நாற்களுக்கு தன் காரை பாவனைக்கு கொடுத்த வக்பு சபை உறுப்பினர் ஒருவர், பலாத்காரமாக வைத்துள்ளதாக போலீசில் முறைப்பாடு செய்துள்ளார். அதனை அடுத்து அந்தக் கார் தற்போது தெமடகொட போலீசாரினால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது கார் போலீஸில் வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான விசாரணை தொடர்கின்றது.
இந்தச் செய்திகள் அத்தனையும் வந்தவர்களின் காதுக்கு விருந்தாக மாற,
இறுதியாக வக்பு சபைக்கு போலீஸ் வரவழைக்கப்பட்டடது.
நிலைமையை சமாளிக்க அங்கு வந்த பொலீஸார், அங்கிருந்தவர்களை வெளியேற்றி வக்பு பைக்கு பாதுகாப்பும் வழங்கினர்.
மறுபுறம் வக்பு சபையில் நடந்த ஊழல் சம்பந்தமாக பல அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்தும் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால், விசாரணை அதிகாரிகள் வக்பு சபைக்குச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூம் பெற்றுக்கொண்டதாக முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் உழல்கள் சம்பந்தமாக இன்னும் பலர் விசாரணைக்கு உட்படுத்த இருப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதற்கு மத்தியில் வக்பு சபையின் முக்கிய உறுப்பினராக இருந்த ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு பல மில்லியன் ரூபாய்கள் மாற்றப்பட்டது
தொடர்பாக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
முன்னிருந்த வக்பு சபை உறுப்பினர்களில் சிலர், மீண்டும் வக்பு சபைக்குள் நுழைய முயற்சிகள் எடுத்த போதிலும் முன்னிருந்த ஊழல்வாதிகள் பதவிகளில் அமர்த்தப்பட மாட்டார்கள் என்ற முடிவினை அடுத்து அவர்களுக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை.
எனவே இவர்களில் ஒருவர் ஞானசார தேரரிடம் சென்று, அவரின் தயவை நாடியுள்ளார். அமைச்சரைப் பற்றிய இல்லாத பொல்லாத பொய்களை எல்லாம் அள்ளிக் கொட்டித் தீர்த்து, தனது ஆத்திரத்தை
தீர்த்துக் கொண்டதாக காற்றில் கலந்து வரும் செய்திகளை காதோடு காது வைத்தாற்போல் அறிய கிடைத்தது.
இதனால் உறக்கத்திலிருந்து விழித்த ஞானஸார தேரர் அவர்கள், வக்பு சபை தன் கனவில் வந்ததைப்போல் திடுக்கிட்டு எழுந்து அமைச்சரை பற்றி உளறி கொட்டியதின் பின்னணி இதுவாகும்.
இத்தனை அமளிது துமளிகளுக்கு மத்தியில்
புதிய வக்பு சபைக்கான உறுப்பினர்களின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவற்றிலும் சில இழுபறிகள் காணப்படுவதாகவும் தெரியவருகின்றது. எவ்வாறாயினும் இன்னும் சில தினங்களுக்குல் சபையின் புதிய நிர்வாக உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட உள்ளது.
வக்பு சபை வரலாற்றில் பள்ளிவாசல் சொத்துக்களை லஞ்சங்களுக்காக, தனிநபர் பெயர்களில் மாற்றிக் கொடுத்து, பள்ளிவாசல்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களை அதே பள்ளிவாசல்களுக்கு நம்பிக்கை பொறுப்புதாரிகளாக நியமித்த, அடிமட்ட ஊழல் நிறைந்த கேடுகெட்ட, வக்பு சபையே கடந்த கால வக்புசபையாகும்.
எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற வக்பு சபைகள் அமையாதிக்க பிரார்த்திப்போமாக.
வேட்டை நிருபர்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments