Women IPL 2023: மகளிருக்கான பிரீமியர் லீக்: யார் யாருக்கு போட்டி, எப்போது, எங்கே? பட்டியல் இங்கே!

Women IPL 2023: மகளிருக்கான பிரீமியர் லீக்: யார் யாருக்கு போட்டி, எப்போது, எங்கே? பட்டியல் இங்கே!


ஆண்டுதோறும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எனப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை முதல் முறையாக பிசிசிஐ அறிமுகம் செய்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இதுவரை ஆண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக மகளிருக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.

அதன்படி இந்த 2023 ஆம் ஆண்டு முதல் மகளிருக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் என்று 5 அணிகள் இந்த மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கின்றன.

மகளிர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளை ஏலத்தில் எடுக்கும் போட்டியில் ஐபிஎல் அணிகள் உள்பட அதானி குரூப், கேப்ரி குளோபல், அப்போலோ பைப்ஸ், அமித் லீலா எண்டர்பிரைசஸ், ஸ்ரீராம் குரூப், ஹல்டிராம்ஸ் குரூ, டோரண்ட் பார்மா, ஸ்லிங்ஷாட் 369 வென்சர்ஸ் பிரைவேட் லிமிட்டே நிறுவனங்களின் உரிமையாளர்களும் போட்டி போட்டனர். 

இறுதியாக குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் என்று 5 அணிகள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டன. இந்த ஏலத்தின் மூலமாக பிசிசிஐக்கு ரூ.4669.99 கோடி வரையில் வருவாய் கிடைத்தது என்று செயலாளர் ஜெய்ஷா கூறியிருந்தார்.

அணி, அணிகளின் உரிமையாளர்கள்:
அதானி ஸ்போர்ட்ஸ்லைன் பிரவேட் லிமிடெட்., - அகமதாபாத் 
இண்டியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்., - மும்பை 
ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ஸ் பிரவேட் லிமிடெட்., - பெங்களூரு 
ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் - டெல்லி 
கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்., - லக்னோ 

மகளிர் பிரீயமியர் லீக் - 5 அணிகள்:

1. குஜராத் ஜெயிண்ட்ஸ்

2. யுபி வாரியர்ஸ்

3. மும்பை இந்தியன்ஸ்

4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

5. டெல்லி கேபிடல்ஸ் 

மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் மகளிர் பிரீமியர் லீக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த தொடரை ஒளிபரப்பும் உரிமையை வையாகாம்-18 (Viacom 18) நிறுவனம் ரூ. 951 கோடிக்கு கைப்பற்றியது. முதல் சீசனுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் மொத்தம் 22 போட்டிகள் நடத்தப்படுகின்றன. வரும் மார்ச் 4 ஆம் தேதி மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் டி20 போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை:

மார்ச் 4 - குஜராத் ஜெயிண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் - டிஒய் படில் ஸ்டேடியம் - இரவு 7.30 மணி
மார்ச் 5 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிடல்ஸ் - பிரபோர்ன் ஸ்டேடியம் - மாலை 3.30 
மார்ச் 5 - யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் - டிஒய் படில் ஸ்டேடியம் - இரவு 7.30 
மார்ச் 6 - மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பிரபோர்ன் ஸ்டேடியம் - இரவு 7.30
மார்ச் 7 - டெல்லி கேபிடல்ஸ் - யுபி வாரியர்ஸ் - டிஒய் படில் ஸ்டேடியம் - இரவு 7.30 மணி
மார்ச் 8 - குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பிரபோர்ன் ஸ்டேடியம் - இரவு 7.30
மார்ச் 9 - டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் - டிஒய் படில் ஸ்டேடியம் - இரவு 7.30
மார்ச் 10 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - யுபி வாரியர்ஸ் - பிரபோர்ன் ஸ்டேடியம் - இரவு 7.30
மார்ச் 11 - குஜராத் ஜெயிண்ட்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் - டிஒய் படில் ஸ்டேடியம் - இரவு 7.30
மார்ச் 12 - யுபி வாரியர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் - பிரபோர்ன் ஸ்டேடியம் - இரவு 7.30
மார்ச் 13 - டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டிஒய் படில் ஸ்டேடியம் - இரவு 7.30
மார்ச் 14 - மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் - பிரபோர்ன் ஸ்டேடியம் - இரவு 7.30
மார்ச் 15 - யுபி வாரியர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டிஒய் படில் ஸ்டேடியம் - இரவு 7.30
மார்ச் 16 - டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் - பிரபோர்ன் ஸ்டேடியம் - இரவு 7.30
மார்ச் 18 - மும்பை இந்தியன்ஸ் - யுபி வாரியர்ஸ் - டிஒய் படில் ஸ்டேடியம் - மாலை 3.30 
மார்ச் 18 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் ஜெயிண்ட்ஸ் - பிரபோர்ன் ஸ்டேடியம் - இரவு 7.30
மார்ச் 20 - குஜராத் ஜெயிண்ட்ஸ் - யுபி வாரியர்ஸ் - பிரபோர்ன் ஸ்டேடியம் - மாலை 3.30 மணி
மார்ச் 20 - மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் - டிஒய் படில் ஸ்டேடியம் - இரவு 7.30 
மார்ச் 21 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் - டிஒய் படில் ஸ்டேடியம் - மாலை 3.30
மார்ச் 21 - யுபி வாரியர்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் - பிரபோர்ன் ஸ்டேடியம் - இரவு 7.30
மார்ச் 24 - எலிமினேஷன் - டிஒய் படில் ஸ்டேடியம் - இரவு 7.30 
மார்ச் 26 - இறுதிப் போட்டி - பிரபோர்ன் ஸ்டேடியம் - இரவு 7.30 மணி

asianetnews



 



Post a Comment

Previous Post Next Post