ஆர்சிபியை விட்டு விலக நினைத்தேன்.. ஆனால்.. கோலியை பார்த்து திருந்துங்க ஹர்திக்.. ரசிகர்கள் அட்வைஸ்

ஆர்சிபியை விட்டு விலக நினைத்தேன்.. ஆனால்.. கோலியை பார்த்து திருந்துங்க ஹர்திக்.. ரசிகர்கள் அட்வைஸ்


மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா தற்போது யாருமே எதிர்பாராத வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவி விட்டார். 

இதற்கு மும்பை அணி ரசிகர்கள் மகிழ்ச்சியை தெரிவித்தாலும், பல்வேறு தரப்பினரும் ஹர்திக் பாண்டியாவின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். 

ஹர்திக் பாண்டியா பணத்திற்காக மாறிவிட்டார் என்று வெளிப்படையாகவே சமூக வலைத்தளத்தில் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில் விராட் கோலியின் பழைய பேட்டி ஒன்றை மேற்கோள் காட்டி இவரைப் பார்த்தாவது இனி மற்ற வீரர்கள் திருந்தட்டும் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

அந்த நேர்காணலில் விராட் கோலி பேசியதாவது நான் நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் ஆர்சிபியை விட்டு வெளியேற முடிவெடுத்தேன். இது குறித்து வெட்கப்பட ஒன்றும் இல்லை. என்னை பல அணிகள் கேட்டார்கள். நானும் அவர்களுடன் பேசினேன். ஆனால் நான் யார் என்று தெரியாத போது ஆர்சிபி அணி தான் என் மீது நம்பிக்கை வைத்து என்னை எடுத்தார்கள். 

மூன்று ஆண்டுகள் நான் அவர்களுக்காக சரியாக விளையாடவில்லை. இருப்பினும் என் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்திருந்தார்கள். இதனால்தான் ஆர் சி பி அணி உடன் நான் விஸ்வாசமாக இருக்கின்றேன். அவர்களே என்னை வேண்டாம் என்று அனுப்பி விட்டாலும் நான் வேறு அணிக்கு செல்ல மாட்டேன். 

வேற அணியில் இருந்திருந்தால் நான் ஐபிஎல் சாம்பியனாக மாறி இருப்பேன் என்று பலரும் கூறுவது உண்டு. ஒருவரை நான் வேறு அணிக்குச் சென்று சாம்பியனாக ஆனாலும் ஐந்து நிமிடம் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆறாவது நிமிடம் என் வாழ்க்கையில் உள்ள பல பிரச்சனைகள் தான் என் கண் முன் வரும். 

இது எல்லாம் கொஞ்ச நேரத்திற்கு சந்தோஷம் கொடுக்கும். நீங்கள் ஒரு அறையில் இருக்கிறீர்கள்.  அங்கே யாராவது வந்து உங்களை ஐந்து முறை சாம்பியன்! உலக சாம்பியன் என்றெல்லாம் அழைக்க மாட்டார்கள். நாம் செய்கின்ற செயலை வைத்து தான் நம்மை அழைப்பார்கள். நான் நல்லவனாக இருந்தேனா? தீயவனாக இருந்தேனா என்பதைத்தான் பார்ப்பார்களே தவிர இந்த ஐபிஎல் கோப்பை எல்லாம் பார்க்க மாட்டார்கள் என்று கோலி கூறி இருக்கிறார். இதை குறிப்பிட்டு ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் நீடித்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

mykhel


 



Post a Comment

Previous Post Next Post