மழையில் செல்போன் பேசியபடி சென்றவர் உயிரிழப்பு - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

மழையில் செல்போன் பேசியபடி சென்றவர் உயிரிழப்பு - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!


சென்னை அசோக் நகரில் மழை நேரத்தில் செல்போன் பேசிய படி சென்ற நபர் திடீரென உயிழந்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த மணிகண்டன் (23) என்ற இளைஞர் மேற்கு மாம்பலம் ஏழாவது நிழல் சாலையில் உள்ள Clitor mediya என்னும் நிறுவனத்தில் எடிட்டிங் வேலை செய்து வந்ததுள்ளார்.  நேற்று இரவு வேலை முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல புறப்பட்டார். அப்போது மழை வெளுத்து வாங்கி கொண்டிருந்ததால் தேங்கியிருந்த மழைநீரில் குடைபிடித்தபடி மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

செல்போனில் பேசியபடி சென்று கொண்டிருந்தவர் திடீரென மொபைல் போனை கீழே போட்டுவிட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.  அதில், 5g மொபைலில் முழு அளவு சார்ஜ் செய்து பேசிக்கொண்டு தண்ணீரில் சென்றதாகவும், திடீரென மொபைலில் ஷர்ட் சர்க்யூட் ஏற்பட்டு தண்ணீரில் விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், அவர் இறந்த பகுதிக்கு அருகில் எவ்வித மின்மாற்றியும் இல்லை என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் மழை தண்ணீரில் கிடந்த அந்த செல்போனை பறிமுதல் செய்ய முற்படும்போது போலீசாருக்கு மின்சாரம் பாய்ந்து உள்ளது. பின்பு பிளாஸ்டிக் கவர் சுற்றி செல்போனை பரிசோதனைக்காக காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர்.

news18



 



Post a Comment

Previous Post Next Post