ஆற்று வெள்ளம்
கரைபுரண்டோட
ஆற்றுமோ இவ்வுள்ளம்
ஓடுகின்ற
காலவெள்ளத்தில்
அரசன் எனது
தென்றலில் தள்ளாடும்
எழில் வண்ணன்!
பொழிலில் மலரும்
அழகு குணமலரே!
இதழ்விரித்துச் சிரிக்கும்
சிரிப்பில் எழில்ததும்பும்
வண்ண ஓவியமே!
நிந்தன் தந்தவண்ண
இதயத்தின் அன்பு தீபமே!
வசந்தா
வாழ்க்கை வீதியிலே
நீர் எமது குன்றிலிட்ட விளக்கு,
பச்சை வண்ண
கண்கவரும் ஊஞ்சலில்
பாசம் எனும்
கயிற்றில் ஆடுகின்றோம்!
உலகை மறந்து
உறவை நினைந்து!
வசந்தா பாபாராஜ்
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments