மந்திரியாரின் சொல்லுக்கு மரியாதை கொடுத்த ராஜா அமைதியாகவே இருந்து பழரசம் அருந்தினார். தொடர்ந்து அனைவரும் மதிய உணவுக்காகப் போய் அமர்ந்தார்கள். மகாராணியாருக்குத் தான் ஒரே பதட்டம். வாய்க்குள் வைத்திடும் உணவை மென்று சுவைத்து உண்ணும் அளவு கூட மனசு இல்லை. ஏதோ விருந்தோம்பல் நன்றாய் நடந்து முடிய வேண்டும் என்பதற்காகவே அமர்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தார் .
நல்ல முறையில் உபச்சாரம் முடியவே புன்னகையோடு கனிகளையும் பங்கிட்டு உண்டார்கள். மந்திரியார் மெதுவாக மகாராணியைப் பார்த்துக் கண் சாடை காட்டி விட்டு அரசர் பக்கம் திரும்பிக் கூறினார். "அரசே மகாராணி தங்களிடம் சிறு வேண்டு கோள் ஒன்றை முன் வைத்திடுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார் அதை நான் இப்போது உங்களிடம் கூறலாமா?" என்று கேட்கவே மகாராணி எவையும் புரியாது விழித்தார். நாம் அப்படி என்ன கூறினோம் எதற்கு என்னை இப்போது கோர்த்து விடுகின்றார் மந்திரியார்.
புரியவில்லையே என்று மனசுக்குள்ளே புலம்பினார்.
அப்போது ராஜா மகாராணி பக்கம் திரும்பி சொன்னார் "கூறுங்கள் அரசே ஏன் தயக்கம் நான் போருக்கு வந்த மன்னன் இல்லையே உங்கள் சம்மந்தி மகராஜாவாகத் தானே அமர்ந்து இருக்கின்றேன் பின்னர் என்ன தயக்கம்"என வினா தொடுத்தார்
மகாராணி தடுமாற ஆரம்பித்தார்.
" இல்ல நான் அதை..." என்று கூறவே குறுக்கிட்டு மந்திரி பேசினார். "அரசே மகாராணியர் தயங்குகிறார். அதனால் தான் என்னிடம் கூறுமாறு கட்டளை இட்டார். இப்போதே நான் கூறுகிறேன் நீங்கள் பதிலை மகாராணியிடமே கூறலாம் பின்னர் இருவரும் பேசி முடிவு எடுங்கள்" என்று பேச்சைத் தொடர்ந்து மகாராணியரைக் காப்பாற்றி விட்டார் மந்திரி .
(தொடரும்)
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments