Ticker

6/recent/ticker-posts

வக்பு சபைத் தலைவர் C I D முன் ஆஜர்: வக்பு சபையை கழுவி எடுக்கப்போகும் CID


தெஹிவளை பகுதியில் வக்பு சொத்துகளில் நடைபெற்ற ஊழல் சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு நேற்று  6 ஆம் திகதி 01 ஆம் மாதம் வக்பு சபைத் தலைவர் C I D யின் ஆவண மோசடி தடுப்புப் பிரிவின் முன்னிலையில் ஆஜரானதாக தெரியவருகின்றது.

இந்த விசாரனையின்போது இவரிடம் நான்கு மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மேலும் இங்கு நடைபெற்ற பல ஊழல்கள் சபை தலைவர் அறியாத வகையிலே நடைபெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. சில  விடயங்களில் துருவி ஆராயாமல் நம்பிக்கையின் அடிப்படையில் இவர் கை ஒபம் இட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் பலருக்கு  C I D யின் ஆவண மோசடி தடுப்பு பிரிவின்  முன் ஆஜராக அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,பலர் இதைத் தவிர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆவண மோசடி தடுப்பு பிரிவு தயாராகி வருகின்றது.

கடந்த காலங்களில் மாற்று சமூகத்தின் அரசியல் வாதிகள் அமைச்சர்களாக இருந்த காலத்தில் வக்பு சபையில் பாரி ஊழல்கள் நடைபெற்றுள்ளன. 

முஸ்லிம் சமூகத்தின் விடயம் என்பதால் அந்தந்த காலப்பகுதிகளில் அமைச்சர்கள் வக்பு சபை விடயத்தை துருவி ஆராய வில்லை. இதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி இவர்கள் இதனுல் பாரிய ஊழல்களை மேற்கொண்டுள்ளனர்.

வக்பு சொத்துக்கள் தனிநபர் பெயர்களுக்கும் நிறுவனங்களின் பெயர்களுக்கும் கோடான கோடி பெறுமதிவாய்ந்த சொதாதுக்கள்  லஞ்சம் மற்றும் ஊழல் அடிப்படையில் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன.

நாவல பள்ளிவாசல் இதே அடிப்படையில் அறக்கட்டளை ஒன்றிற்கு மாற்றிக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன்பு நீதிமன்றம் இதை ரத்துச் செய்து மீண்டும் நூராணியா பள்ளிவாசல் மற்றும் மதரஸாவிடம் ஒப்படைத்தது.

இவர்கள் ஒரு பள்ளிவாசல் சொத்தை தனிநபரின் பெயருக்கு அல்லது ஒரு நிறுவனத்தின் பெயருக்கு மாற்றிக் கொடுத்ததன் பின்பு, அந்த ஊர் மக்கள் அதுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதை மீண்டும் நீதிமன்றம் மூலமாக  பெற்றுக் கொள்ள வேண்டும். 

அந்த அதிகாரிகள் செய்த ஊழலுக்கு எதிராக யாரும் சட்ட நடவடிக்கை எடுக்க  முற்படுவதில்லை.  இதனால் எந்தப் பயமும் இன்றி தொடர்ந்தும் இவ்வாறான ஊழல்களில் இவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த காலத்தில் வக்பு சபையில் நடைபெற்ற ஊழல் சம்பந்தமாக மேலும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் அவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கடந்த 70 வருட கால வரலாற்றில் முதன்முறையாக கடந்த  வெள்ளிக்கிழமை வக்பு  சபையில் C I D புகுந்தது. இதுவே வக்பு சபை வரலாற்றில் முதல் தடவையாகும். 

அப்போது தேடிச் சென்ற வக்பு சபை அதிகாரிகள் சபையில் இருந்ததாகவும், தாம் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் அவர்கள் தலைமறைவாகியதாகவும் தெரிய வருகிறது. அவ்வாறான ஒரு சிறந்தத வக்பு  சபையை தற்காலப் பகுதியில் நாம் பெற்றிருக்கிறோம் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

வேட்டை நிருபர்

 


Post a Comment

0 Comments