Ticker

6/recent/ticker-posts

மது அருந்திய ஐவர் மரணம்: பெண் கைது


சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், வென்னப்புவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் உடலங்கள் வைக்கல பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இருவர் மாரவில ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் சட்டவிரோத மதுபானம் அருந்தியமையாலேயே   உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வென்னப்புவ காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை. இவர்கள் கசிப்பு அருந்தியுள்ளதாகவும், அதனை விநியோகித்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தார். 

tamilmirror

 


Post a Comment

0 Comments