
இந்த வேகமான தொழில்நுட்ப யுகத்தில், மாற்றம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் உலகத்தில், ஒரு முக்கியமான விஷயம் நம்மிடமிருந்து மெதுவாக மறைந்துகொண்டிருக்கிறது.
அது தான் நம்முடைய முன்னோர்களின் நினைவுகள்.
நம் சமுதாயத்தின் அடித்தளத்தை கட்டியவர்கள்.பண்டிதர்கள், நல்லாட்சி செலுத்திய அரசியல்வாதிகள், வாழ்க்கையை அர்ப்பணித்த வீரர்கள், மதத்திலும் அறிவிலும் உயர்ந்த அறிஞர்கள், இவர்கள் பெயர்களும் வரலாறுகளும் காலச்சூழலில் மறைந்து கொண்டிருக்கின்றன.
அவர்கள் தங்கள் வாழ்க்கையை தங்களுக்காக மட்டும் அல்ல. நாங்களும் ,நமது எதிர்கால சந்ததியினரும் நிம்மதியாகவும் ,தலை நிமிர்ந்தும் வாழ அவர்களின் வாழ்கையை அர்ப்பணித்தவர்கள்.
அவர்களின் அறிவு, தியாகம், நம்பிக்கை மற்றும் வீரம்,இவையே நம் அடையாளத்தின் தூண்கள்.
ஆனால் அவர்கள் செய்த தியாகங்களை நாம் இன்று மறந்து கொண்டிருக்கின்றோம்.
இன்றைய இளம் தலைமுறை இவைகளை அறியாமல் வளர்ந்துவிட்டால், வரலாற்றை மட்டுமல்ல. நம்முடைய இலக்கையும் நாம் இழந்து விடும் நிலை ஏற்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
அவர்கள் பெயர்களை மீண்டும் சொல்ல வேண்டும்.
அவர்கள் கதைகளை மீண்டும் கூற வேண்டும்.
அந்த மகான்களின் தியாகங்களை எங்கள் பிள்ளைகளின் மனதில் ஆழமாக பதிவிடவேண்டும்.
ஒரு இளம் மனம், அறிவுக்காக வாழ்ந்த ஒரு அறிஞரைப் பற்றி அறிந்தால், ஒரு ஆசிரியராக மாறுவதற்கான கனவை காணும்.
நியாயத்திற்காக உயிர் தந்த வீரரைப் பற்றி கேட்டால், துணிச்சலுடன் வளர்வார்கள்.
நேர்மையுடன் சேவை செய்த ஒரு தலைவரைப் பற்றி கேட்டால், அவர்கள் உண்மையுடன் வழிகாட்ட விரும்புவார்கள்.
மத அறிஞர்களின் நம்பிக்கையைப் புரிந்துகொண்டால், அவர்கள் மதிப்பும் பணிவும் கொண்டவர்களாக வளர்வார்கள்.
இது ஒரு பழைய கதையல்ல. இது நம் அனைவரினதும் எதிர்காலம் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய விடயம் என்பதை கருத்தில்கொண்டு
அந்த மகான்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு எமது மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்..
அவர்களை பற்றி எழுதுவோம்.
அவர்களின் பெயர்களை ஒலிப்போம்.
நேற்றைய பெருமைக்கும் நாளைய நம்பிக்கைக்கும் இடையில் ஒருபாலம் அமைப்போம்.
ஏனெனில், வேர் இல்லாத மரம் வாடிவிடும்.
ஆனால் சரியான பாதையில் செல்லும் கற்ற இளம் தலைமுறை தனது அடிப்படையில் நிலைத்துவிடும்.
இந்நிலையில் மீடியாலின்க் நிறுவனத்தின் தலைவர் M.H.M.நியாஸ் அவர்களின் தலைமையில், AL ASLAF FOREBEAR MEMORIAL FORUM என்ற நிறுவனம் இந்த உன்னதமான முயற்சியில் இறங்கியிருப்பது மிகவும் பெருமைப்படக்கூடிய ஒரு விடயமாகும்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments