Ticker

6/recent/ticker-posts

வக்பு சபைத் தலைவருக்கு எதிராக CIDயில் முறைப்பாடு


தெஹிவளைப் பிரதேசத்தில் இரு பள்ளிவாசல் சொத்துக்களுக்கு மோசடியான முறையில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டமை,  அந்த ஆவணங்கள் சில வற்றிற்கு வக்பு சபை அனுமதி அளித்தமை, மோசடி நடந்து இருப்பதாக வக்பு சபைக்கு அறிவிக்கப்பட்டு, வக்பு சொத்து  மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை சம்பந்தமாக அப்பகுதி மக்களால் CID இல் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாடானது CID பணிப்பாளரின் நேரடியான  உத்தரவின்   பிரகாரம் CID இன் கீழ் இயங்கும் ஆவண மோசடிப தடுப்பு பிரிவுக்கு ( SCIB )  SPECIAl CRIME INVESTIGATION BUREAU அனுப்பப்பட்டு, அதன்  விசாரணை கொழும்புக்கான பிரிவு  கல்கிசையில் இயங்கும் SCIB இனால் வக்பு சபைத்தலைவர்  அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இச்செய்தியானது வேட்டை இணையத்தளம் உற்பட மும் மொழியிலான பல செய்தி  இணையதளங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

இணைய வழியாக பிரசுரிக்கப்பட்டிருந்த செய்திகளில் CID இன் ஆவண மோசடி மோசடிப் பிரிவு தடுப்புப் பிரிவு என தெளிவாக   குறிப்பிடப்பட்டிருந்து. 

SCIB என்பது ஆவண மோசடிகளை விசாரிக்க CID இன் கீழ் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பிரிவாகும். இப்பிரிவானது நாட்டின் பல பாகங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்புக்கான பிரிவு கல்கிசை SSP அவர்களின் நேரடி கண்காணிப்பின்  கீழ் இயங்குகின்றது.

இங்கு விசாரணைக்காக ஆஜராகிய வக்பு சபைத் தலைவர், SCIB அதிகாரிகள் இவரிடம்  முன்வைத்த மோசடியான ஆவணங்களை பரிசீலனை செய்த பின்பும், மோசடிகள் நடந்ததாக இவர் ஒப்புக் கொண்டுள்ளார். இவரது வாக்குமூலத்தில் இவர், சிங்கள மொழியில்,(අක්‍රමිකතා සිදුවී ඇති බව මට පෙනේ) "மோசடிகள் நடந்துள்ளதாக தெரிகின்றது"என வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இவ்வாறு அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கிய இவர், தாம் CID இல் ஆஜராகவில்லை எனவும், கல்கிசையில் உள்ள (SCIB) இல் ஆஜரானதாகவும், அங்கு மோசடிகள் சம்பந்தமாக தான் விசாரிக்கப்படவில்லை என்றும்,  இரு பள்ளிவாசல்களின் பதிவுகள் சம்பந்தமாகவே தன்னிடம் வினவியதாகவும், இது பொய்யான செய்தியாகும் என அரச இலட்சணையை பயன்படுத்திய கடிதம் ஒன்றில் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்திருந்தார்.

தனது வாய்மொழியில் மோசடிகள் நடந்துள்ளதாக தெரிகின்றது என ஒப்புக்கொண்டு, மோசடியான ஆவணங்களை தான்  பரீட்சித்த பின்பும், அவ்வாறான மோசடிகள் நடக்கவில்லை என்றும், மோசடிகள் சம்பந்தமாக தான் விசாரிக்கப்படவில்லை என்றும், அரச  இலட்சினை பயன்படுத்தி நாட்டையும் நாட்டு மக்களையும், செய்தித் தளங்களையும் தனது அதிகாரத்தை பாவித்து அதிகாரத் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
எனவே நாட்டையும் நாட்டு மக்களையும் செய்தித்தளங்களையும் பிழையாக வழிநடத்தியது உட்பட, ஒரு பாரிய பொதுச்சொத்து மோசடியை மறைக்க முற்பட்டமை, மக்களுக்கு உண்மையை அறிந்து கொள்ளும் உரிமையை மறுத்தமை சம்பந்தமாக இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, இவருக்கு எதிராக கொழும்பு CID பிரதான காரியகாரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேட்டை நிருபர்

 


Post a Comment

0 Comments