
500. வினா : இல்லற வாழ்வில் மிகுந்த இன்பம் தருவது எது?
விடை : ஊடுதல் , பின் கூடுதல்
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்,(1330)
501. வினா : எது அறம்?
விடை : மனத்துக்கண் மாசிலன் ஆதல்
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாசொல்
இந்நான்கும் இல்லாதிருப்பது(34) அறம்
செயற்பாலது (நற்செயல்கள்) புரிவது(40) அறம்
முகனமர்ந்து இன்சொல் வழங்குவது(92 அறம்
அகனமர்ந்து ஈதல்(92) அறம்
நல்லவை நாடுதல்; இனியவை கூறுதல்(96) அறம்
அல்லவை தவிர்த்தல்; நல்லவை நாடுதல்(96) அறம்
பண்பின் தலைப்பிரியாமை(97) அறம்
சிறுமையுள் நீங்குதல்(98) அறம்
பிறர் நமக்கு உதவாத நிலையில் நாம் செய்யும் உதவி(101) அறம்
காலத்தால் செய்யும் உதவி(102) அறம்
பயன் தூக்காது செய்யும் உதவி(35)
துன்பத்தில் துணையாவது(103) அறம்
துன்பம் (விழுமம்) துடைத்தல்(106) அறம்
நெஞ்சத்துக் கோடாதிருப்பது(107) அறம்
நடுஓரிஇ அல்ல செய்யாது இருப்பது(115) அறம்
அடக்கம் உடைமை(116) அறம்
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments