
நாட்டிற்கு மருந்துகள் இறக்குமதி செய்யும் போது பெருமளவு பொதுமக்கள் பணத்தை மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தற்போது சிவப்பு பிடியாணை (Red Notice) பிறப்பிக்கப்பட்டுள்ள டாக்டர் ஜயநாத் புத்தபிட்டியுடன், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பல முக்கிய உறுப்பினர்கள் நெருங்கிய தொடர்புகளை பேணிவந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவர்களின் ஒரு “மாபியா” வலையமைப்பை பராமரிக்கும் நோக்கில், சில மருத்துவர்களுக்கு இடமாற்றம் வழங்காமல் ஒரே மருத்துவமனையில் தொடர்ந்து வைத்திருப்பது மற்றும் தடுப்பூசிகளுக்கு பதிலாக நீர் வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த மருத்துவர்களை தொடர்ந்து பாதுகாக்க, கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் இணைந்து ஜயநாத் புத்தபிட்டிய செயல்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், மருந்து மோசடி தொடர்பான வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் ரூபாய் 5 கோடி வீதம் அபராதம் விதித்திருந்த சுகாதார அமைச்சின் முன்னாள் அதிகாரிகளுடனும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சில முக்கியஸ்தர்கள் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments