
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), குஜராத் டைட்டான்ஸுக்கெதிரான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸில் தனது அறிமுகத்தை மேற்கொண்ட இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண வெறும் எட்டுப் பந்துகளை மட்டுமே வீசியிருந்தார்.
கொல்கத்தாவில் சனிக்கிழமை (16) நடைபெற்ற போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் தாக்கம் செலுத்தும் வீரராகக் களமிறங்கிய பத்திரண, பின் தொடை தசைநாரில் உபாதை காரணமாக களத்தை விட்டு வெளியேறியிருந்தார்.
இனிங்ஸின் நான்காவது ஓவரில் அறிமுகப்படுத்தப்பட்ட பத்திரண, அந்த ஓவரைப் பூர்த்தி செய்து தனது இரண்டாவது ஓவரின் முதல் பந்தை வீசிய பின்னரே உபாதையை உணர்ந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்றிருந்தார். அடுத்த பந்தை அரைகுறை முயற்சியில் வீசியதுடன், அதைத் தொடர்ந்து களத்திலிருந்து வெளியேறியிருந்தார்.
ஏலத்தில் 18 கோடி இந்திய ரூபாய்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பத்திரண, இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியில் இடைநடுவே விலகி முழுத் தொடரையும் தவறவிட்டிருந்தார்.
பின்னர் கெண்டைக்கால் பின்தசைக் காயத்தால் இலங்கை கிரிக்கெட் சபையின் உடற்றகுதிச் சோதனையில் தேறிய பின்னரே நான்கு போட்டிகளில் விளையாடுவதற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டு கொல்கத்தாவின் 12ஆவது போட்டியிலேயே இப்போது களமிறங்கியிருந்தார்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments