Ticker

6/recent/ticker-posts

நேர்வழி நோக்கிய வரலாற்றுப் பாதை! -2


அத்தியாயம் -2
நபி ஆதம் (அலை)
நபி ஆதம் (அலை) அவர்களுக்கு இறைவன் ஹவ்வா (அலை) அவர்களை சுவர்க்கத்தில் சோடியாகச் சேர்த்தான். ஹவ்வா (அலை) அவர்கள், நபி ஆதம் (அலை) அவர்களின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவர்களாவர்!

அவர்கள் சுவர்க்கத்துப் பூங்காவில் வாழ்ந்து கொண்டிருக்கையில், வழிகெடுக்கும் ஷைத்தானின் தூண்டுதலால், அல்லாஹ் உண்ணத்தடுத்திருந்த  பழத்தைப் புசித்ததன் காரணமாகப் பூமிக்குத் தூக்கியெறியப்பட்டார்கள். அவர்களோடு சேர்ந்து ஷைத்தானும், அவனுக்குதவிய மயில், பாம்பு என்பனவும் பூமிக்கு வீசி எறியப்பட்டன!

முதல் மூத்த சந்ததியான ஆதம்  - ஹவ்வா அவர்கள் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கையில், அவர்களுக்கு சோடிகளாகவே குழந்தைகள் பிறந்தனர். சில தகவல்களின் படி 20 சூல்களில்  பிறந்தனர் என்றும், வேறும் சில தகவல்களின்படி அதற்கும் மேற்பட்ட சூல்களில்  பிறந்தனரென்றும் அறிய முடிகின்றது.

எது எவ்வாறிருந்தபோதிலும்  காபீல் - அக்லிமியா,  ஹாபீல் - லபூதா என்ற சோடிகளே ஆரம்பத்தில்  பிறந்தவர்களாவர். பருவ வயதை அடைந்ததும், ஹாபீலுக்கு அக்லிமியாவை மணமுடித்து வைக்கும்படி  அல்லாஹ்  ஆதம் (அலை) அவர்களைக் கேட்டுக்கொண்டான். காபீல் அக்லிமியாவை மணக்க ஆசைப்பட்டு, ஹாபீலைக் கொன்றதுமல்லாமல், இறை நிராகரிப்பாளர்களில் முதன்மையானவனாகவும் நரகத்திற்குப் போகும் முதற்பாவியாகவும் ஆனான்!

ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் பத்துக் கட்டளைகளை வழங்கி, அக்கட்டளைகள் மூலம் மக்களை நேர்வழிப்படுத்தும்படி பணித்தான்.
(தொடரும்)


Post a Comment

0 Comments