
அல் அஸ் லாப் முன்னோர் நினைவு மன்றம் சமீபகாலமாக நடாத்தி வரும் முன்னோர்களை நினைவு கூறும் நிகழ்வு மிகவும் வரவேற்கத்தக்கது ,மற்றும் இன்றி அது காலத்தின் தேவையாகவும் உள்ளது.
புதைந்து கிடக்கும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை எடுத்து கூறப்படவேண்டிய ஓர் நிர்பந்த நிலையில் நாம் இருக்கின்றோம்.
காரணம் வரலாறு இல்லாத சமூகம் இந்த உலகில் எவ்வாறு ஒதுக்கப்படுகிறதோ...நசுக்கப்படுகிறதோ...அதைவிட மிக பாதகமான விடயம்தான் ஒரு சமூகம் தமக்கு இருக்கின்ற வரலாற்றை அறியாமல் இருப்பது.
ஒரு பக்கம் சதி திட்டத்தின் விளைவாக எமது உண்மை வரலாறுகள் மாற்றப்பட்டு சித்தரிக்கப் படும் நிலையானது மிகவும் கவலையான விடயமாகும்.
நமது சமூகத்திற்கு இவ்வாறான ஓர் அச்சுறுத்தல் இருப்பதை கூட விலங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு எமது சமூகம் தமது வரலாற்றை அறியாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
ஆகவே இவ்வாறான சந்தர்பத்தில் தமது சமூகத்தின் தேவையை சிந்தித்த அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மண்றம் இந்த நாட்டில் நாம் தலை நிமிர்ந்து கெளரவமாக வாழவேண்டும் என்பதற்காக மறக்கடிக்கப்பட்டு புதைக்கப்பட்ட நமது முன்னோர்களின் வரலாறுகலை சிரமம் பாராது தேடி கண்டுபிடித்து அவைகளை சமூக மயப்படுத்துவது இன்றியமையாதது.
அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
அன்று நமது முன்னோர்கள் இறை நம்பிக்கையோடு நம் தேசத்திற்கும்,நம் சமூகத்திற்கும் பல நற்பணிகளை செய்து வரலாற்றை படைத்தனர்
அல் குர்ஆன் குறிப்பிடுவதை போன்று :
بسم الله الرحمن الرحيم ،
وبشرالذين ءامنوا وعملوا الصلحت ان لهم جنت تجري من تحتها الانهر. الخ.........
"நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்பணிகளை செய்கிறார்களோ அவர்களுக்கு ( சுகன்டியான ) சுவர்க்கம் உண்டு "
என நபியே நற்செய்தி கூறுவீராக.
(அல் குர்ஆன் )
ஆகவே நமது சமூக உணர்வு கொண்ட அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றத்தின் செயல் வீரர்கள் நாம் இழந்த அந்த உரிமைகளை மீளப்பெற அவைகளின் தேடலில் களம் இறங்கி போராடும் இக் கருத்து போராட்டம்.....மற்றும் எழுத்து போராட்டம்....
ஆயுத போராட்டத்தையும் தாண்டி பலம் வாயந்ததாகும்....
ஏனென்றால் ஆயுத போராட்டத்தின் போது சில சமயம் வெற்றி பெற்றாலும் அதிலே நாம் நம்மவர்களின் சிலரையோ எதிர் தரப்பினரின் சிலரையோ இழக்க நேரிடும்....?
ஆனால் இப்போராட்டம் அவ்வாறல்ல அறிவிற்கும் உணர்விற்கும் உண்மையை எடுத்து காட்டும் சத்திய போராட்டமாகும்.
நம் நாட்டில் கடந்த பல சகாப்த காலமாக சிலர் நமது மக்களை விமர்சனம் செய்வதற்கும், நமது மத சுதந்திரம் மற்றும் கலாச்சார விழுமியங்களை பறிப்பதற்கும் நாம் இந்த நாட்டில் வாழ்வதற்கு அருகதை அற்றவர்கள் என்று அச்சுறுத்தல் விடுவதற்கும்,ஆகாயத்தில் பரக்கலாம் ஆனால் கூடு கட்ட நினைக்க வேண்டாம் என்று சொல்லி நையாண்டி செய்யப்படுவதற்கும், சுருங்க சொன்னால் வந்தான் வறுத்தான்என்று சூசகமாக சொல்வதற்கும், அடிப்படை காரணம் நம்மவர்கள் தமது தாய் நாட்டில் தமக்கு இருக்கின்ற உரிமைகள் மற்றும் வரலாறுகள் சம்பந்தமான உண்மை தன்மையை அறியாமைதான்.
இந்த நாட்டின் சுதந்திரம் மற்றும் சுதந்திரத்திற்கு முன் இருந்து இதுவரைக்கும் நாட்டின் மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்காக, பொருளாதார வீழ்ச்சியின் போது அதனை கட்டியெழுப்புவதற்காக , இனக்கலவரம் ஏற்படும் போது ஆவேசம் படாமல் பொறுமையை கையாண்டு அதனை சுமூகமாக தீர்த்து வைப்பதற்காக என்று எண்ணில் அடங்காத பல தியாகங்களை செய்துள்ளார்கள்.
இன்னும் செய்துகொண்டும் இருக்கின்றார்கள்.
ஆகவே இன்றைய செயல் நாலைய வரலாறாக மாறுகிறது.
இவ்வாறான முஸ்லிம் உம்மத்தின் நூற்றுக்கணக்கான வரலாறுகளை நாம் மறந்து உரிமைகளை துறந்து எமது தாயகத்தில் எதற்கும் அருகதை அற்ற அனாதைகளாக நிற்கின்றோம்.
ஆகவே இந்த நிலை மாறவேண்டும்.
எமது எதிர்கால சந்ததியினர் இந்த நாட்டில் தலைநிமிர்ந்து கெளரவமாக வாழவேண்டும் என்றால் புதைக்கப்பட்ட , மறக்கடிக்கப் பட்ட நமது முன்னோர்கள் பாதம் பதித்த வரலாறுகள் கண்டு பிடிக்கப்பட்டு சமூக மயப்படுத்தி பாதுகாக்கப் படவேண்டும்.
அந்த கெளரவ மிக்க பயனத்தை புறப்பட்ட எமது *அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றத்தின் தலைவர் ஜனாப் M.H.M நியாஸ் உட்பட்ட நமது முன்னோர்களின் வரலாற்று தேடலின் பங்குதாரர்களாகிய தேசாபிமான கெளரவ நிர்வாக உறுப்பினர்களுக்கும்*.....
நாம் நமது ஒத்துழைப்பு மற்றும் நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவதுடன் அதன் வெற்றிக்கும் நேர்த்தியான பயனத்நிற்கும் எமது துஆ பிரார்த்தனைகள மேற்கொள்ள வேண்டும் என்று கூறி மெளனம் பெரும் இறை சேவகன்
அஷ் ஷேக் கலீலுர் ரஹுமான்
றம்புக்கண.
( சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின்
இலங்கை மத விவகார ஆலோசகர்).

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com



0 Comments