கிழக்கு துர்கிஸ்தான் சீனாவின் “ஷின்கியான்” ஆனதெப்படி? - 4

கிழக்கு துர்கிஸ்தான் சீனாவின் “ஷின்கியான்” ஆனதெப்படி? - 4


முஸ்லிம்
நாடுகளில் வேலை பார்த்துவிட்டு, மீண்டும் சீனா திரும்புபவர்களைச் சீனா தீவிரமாகக் கண்கானித்துவரும். சந்தேகம் என்று வந்து விட்டால்  ஆண், பெண், சிறுவர், சிறுமி என்கிற எவ்வித வேறுபாடுகளுமின்றி முகாம்களில் அடைத்துவிடுவார்கள்.


இதற்கென்றே ஷின்கியாங்   மாகாணத்தில் ஆயிரக்கணக்கில் முகாம்கள் உள்ளன. இவ்வாறாக  பத்து இலட்சம் முஸ்லிம்கள்  முகாம்களில் அடைபட்டுக் கிடப்பதாக  இணையத் தளங்களினூடாக அறிய முடிகின்றது.

இத்தகைய முகாம்களை  Re-education Camp  என்று சீனா சொல்கிறது. சீனா இப்படிச் சொன்னாலும், உண்மையில்  இதுவதைக்கூடம் தான் என்கின்றனர் முகாம் களிலிருந்து தப்பி வந்தோர்.

முகாமில் இருக்கும்போது, சீன கம்யூனிச அரசின் வரலாற்றுக் கொள்கைகளைப் படிக்க வேண்டும். ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளக் கூடாது. ஒவ்வொரு வகுப்பு முடிவடையும்போதும், சீன அதிபரை வாழ்த்தி 'லாங் லைவ் ஜின்பிங்' என்று கோஷமிட வேண்டும்.

சீன அதிபராக இரண்டாவது முறையாக  ஸீ ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முஸ்லிம்கள் மீது கம்யூனிச அரசின் பிடி இன்னும் இறுகியது.

அதாவது, முஸ்லிம் மக்களாகத் தங்களை நினைப்பவர்கள்  இனிமேல் சீனர்கள்  என்ற ஒரே  அடையாளத்துடன்தான்  அந்த நாட்டில் வாழ வேண்டும். உணவு பழக்க வழக்கங்களில் இருந்து எல்லா விஷயங்களிலும் தங்களை சீனர் களாகவே அவர்கள் உணர வேண்டும்அதாவது,  ஹராம் - ஹலால் எதுவும் பார்க்கக் கூடாது.

உய்கூர் முஸ்லிம் மக்கள் தம்மை மாற்றிக் கொள்வதற்காக, ஐந்து ஆண்டுகள் காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.

ஷிஜின்பிங்கின் தூதுவர்கள் அங்குள்ள இஸ்லாமிய அமைப்புக்களின் தலைவர்களைச் சந்தித்து அரசின் நிலைப்பாட்டை விளக்கி, இதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு  கேட்டு வருகின்றனர்.

உய்கூர் இன முஸ்லிம் மக்கள்  தங்கள் உண்மையான அடையாளத்தை இழந்து விட்டு,  தேசியத்துடன் இணைந்தே செல்ல வேண்டுமென்பதே  சீன அரசின் எண்ணமாகும்.

இதற்கிடையே,  முகாம்களில் அடைபடுபவர்களின்  இதயம், சிறுநீரகம், கல்லீரல், போன்றவற்றை சீன அரசு எடுப்பதாக .நா மனித உரிமை கவுன்சில் சீனா மீது  ஒரு அதிர்ச்சிகரமான  குற்றச்சாட்டை  சுமத்தியது.

இதற்கு மறுப்பு தெரிவித்த சீனா, “மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்ற வாளிகளின் உடல் உறுப்புகளை வெட்டி எடுத்தது உண்மைதான். ஆனால், 2015-ம் ஆண்டு முதல் அதனையும் நிறுத்திவிட்டோம். .நா மனித உரிமை கவுன்சிலின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றதுஎன்று பதிலளித்துள்ளது.

பாலஸ்தீன், காஷ்மீர். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா நாடுகளில் மக்கள் அடக்கியொடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிப் பேசுகின்ற உலகம், கிழக்கு துர்கிஸ்தானில் உய்கூர் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் கண்டு கொள்வதே  இல்லை.

.நாவில் வீட்டோ பவர் கொண்டுள்ள சீனாவைப் பகைத்துக் கொள்ள உலக நாடுகள் விரும்பாததே  இதற்குக் காரணமாகும்.

பாகிஸ்தானில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள  “இம்ரான் கான்  கூட, காஷ்மீர் பிரச்சினை பற்றி வரிந்து கட்டிக் கொண்டு பேசுகின்ற போதிலும், கிழக்கு துர்கிஸ்தான் பற்றி மௌனம் சாதிப்பதாக அமெரிக்காவே குற்றம் சாட்டியுள்ளமை இங்கு ஈன்று குறிப்பிடத்தக்கது.
(முற்றும்)
 

Post a Comment

Previous Post Next Post