2021-ம் ஆண்டின் 18வது டி20 வெற்றியைப் பெற்று பாகிஸ்தான் சாதனை

2021-ம் ஆண்டின் 18வது டி20 வெற்றியைப் பெற்று பாகிஸ்தான் சாதனை

கராச்சியில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் 200 ரன்கள் குவித்த பாகிஸ்தான் பிறகு மே.இ.தீவுகளை 137 ரன்களுகு மடக்கி 2021-ம் ஆண்டின் 18வது டி20 வெற்றியைப் பெற்று சாதனை புரிந்துள்ளது.

கராச்சியில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் 200 ரன்கள் குவித்த பாகிஸ்தான் பிறகு மே.இ.தீவுகளை 137 ரன்களுகு மடக்கி 2021-ம் ஆண்டின் 18வது டி20 வெற்றியைப் பெற்று சாதனை புரிந்துள்ளது.

டாஸ் வென்றால் பேட்டிங்கை செய்ய வேண்டும். ஆனால் மே.இ.தீவுகளின் கேப்டன் நிகலஸ் பூரான் பவுலிங்கை தேர்வு செய்ததில் மைதானம் நெடுக ஓடி ஓடி உழைத்ததுதான் மிச்சம். ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் பந்து வீச்சை ஒருக்கை பார்த்த ரிஸ்வான் 78 ரன்களை விளாசினார். ஹைதர் அலி 39பந்துகளில் 6 பவுண்டரி 4 மிகப்பெரிய சிக்சர்களுடன் 68 ரன்கள் விளாச, கடைசியில் முகமது நவாஸ் இறங்கி 10 பந்தில் 30 ரன்கள் விளாசினார். இதனையடுத்து 200/6 என்று இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவர்களில் 137 ரன்களுக்குக் காலியானது, பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் ஷதாப் கான் அதியற்புதமாக வீசி 4 ஓவர் 17 ரன்கல் 3 விக்கெட் என்று அசத்தினார்.

முகமது ரிஸ்வான் இந்த 78 ரன்கள் மூலம் 2021-ல் 27 டி20 சர்வதேசப் போட்டிகளில் 1201 ரன்கள் விளாசியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி கோவிட்டினால் ஷெல்டன் காட்ரெல், ஆல்ரவுண்டர்கள் ராஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் போன்ற டி20 ஸ்பெஷலிஸ்ட்களை இழந்தது. இதனையடுத்து டோமினிக் டிரேக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டார் ஆனால் இவர் 4 ஓவர்கள் 43 ரன்கள் விளாசப்பட்டார்.

புதிதாக வந்த பேட்ஸ்மென் சமார் புரூக்ஸ் 5 ரன்களில் வெளியேறினார். முன்னதாக ரிஸ்வான் 52 பந்துகளில் 78 ரன்கள் விளாசியதில் ஹைதருடன் 105 ரன்கள் கூட்டணி அமைத்தார். பாபர் ஆசம் 3வது டக்கை அடித்தார். இடது கை ஸ்பின்னர் அகீல் ஹுசைன் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். ஹுசைன் ஸ்பெல் முடிந்தவுடனேயே ரிஸ்வான், ஹைதர் மே.இ.தீவுகள் வேகப்பந்து வீச்சாளர்களான ஓடியன் உள்ளிட்டோரை சாத்தி எடுத்தனர், ஓடியன் 4 ஓவ்ர் 56 ரன்கள் விளாசப்பட்டார்.

ஆனால் ஓடியன் ஸ்மித்துக்கு ஒரே ஆறுதல் என்னவெனில் அதிரடி மன்னர்களான ரிஸ்வான், ஹைதருக்கு அருமையான கேட்ச்களை எடுத்ததே. ஆனால் முகமது நவாஸ் வந்தார் 10 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களை விளாசி பெர்பெக்ட் பினிஷிங் டச் கொடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கில் இறங்கிய போது முகமது வாசிம் நிகலஸ் பூரன் (18) ஸ்டம்பை பெயர்த்தார், டெவன் தாமஸ் (2) விக்கெட்டை எல்.பி.செய்தார் இரண்டுமே செம யார்க்கர்கள். பிறகு வாசிம் வந்து கடைசி ஓவரில் 2 டெய்ல் எண்டர்களையும் காலி செய்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் இந்த மே.இ.தீவுகளுக்கு எதிராக 4 ஓவர் 40 ரன் என்பது சாரி ரொம்ப டூ மச்.

ஓபனிங் பேட்டர் ஷே ஹோப் அதிகபட்சமாக 31 ரன்களை எடுத்தார். ஸ்மித் 24 ரன்களையும் ரொமாரியோ ஷெப்பர்ட் 21 ரன்களையும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் 14 ஓவரக்ளிலேயே 88/7 என்று சரிந்து கடைசியில் 137 ரன்களுக்கு மடிந்தது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் 1-0 முன்னிலை. ஆட்ட நாயகன் ஹைதர் அலி.


Post a Comment

Previous Post Next Post