
1957 ம் ஆண்டிற்கு பின் எமது இலங்கை திரு நாட்டில் ஏற்பட்ட அதி பயங்கரமான வெள்ளப் பெருக்கு சென்ற வாரம் 2025 ம் ஆண்டு நவம்பர் இறுதிப் பகுதியில் ஏற்பட்டதுதான்.
இந்த அனர்த்தம் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் பெரியதோர் அச்சுறுத்தலையும் படிப்பினையும் தருகிறது.
"அல்லாஹ் நம் அனைவருக்கும் அதனை தெலிவூட்டுவானாக."
இறை சிந்தனை அற்றவர்களாக உலக மோகத்தில் வாழக்கூடிய பெரும்பாலான மனிதர்களால் நடை பெறும் பாவங்களும், அநியாயங்களும் இந்த மண்ணிலே அதிகரிக்கும் போது விண்ணில் இருந்து மண்ணை நோக்கி அல்லாஹ்வின் சோதனை வரும் என்பதாக எம் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் இன்றைக்கு ஹிஜ்ரி 1446 வருடங்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
"அல்லாஹ் நம் அனைவரையும் இனியும் பாதுகாப்பானாக."
படைத்தவனுக்கு படைப்பினங்கள் நன்றி செலுத்த மறப்பது, அவனது கட்டளைகளை உதாசீனம் செய்வது இவ்வாறான அனர்த்தங்கள் சமூகத்தை வந்தடைவதற்கு காரணமாகும் என்பதில் சந்தேகம் கிடையாது.அவ்வாறே தான் படைப்பினங்கள் தமக்குள் மனித நேயத்துடனும் , நன்றி உணர்வோடும் ,உபகாரம் புரியும் சிந்தனையுடனும் நடந்துகொள்ள வேண்டும்.
அதன் அடிப்படையில்...
எமது நாட்டில் அவ்வப்போது சில பகுதிகளில் ஏற்படும் அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக பாதிக்கப்படாத பிரதேசங்களின் உறவுகள் பல்வேறு பட்ட விடயங்களின் ஊடாக உதவி ஒத்தாசை வழங்கும் பண்பாடு உள்ள மனித நேயம் கொண்ட சமூகமாக நாம் வாழ்கிறோம்.
சில நாட்களுக்கு முன்னதாக எமது நாட்டில் ஏற்பட்ட சூறாவளி , வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கையின் அகோர வேட்டையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிக்கரம் நீட்ட முன்வந்த கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த மல்வானை ஜும்மா மஸ்ஜித் வெளிமாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அனர்த்த நிவாரண பொருட்களை சேகரிக்க ஒரு நிலையத்தை ஏற்பாடு செய்து மஸ்ஜித் நிர்வாகத்தின் ஊடக இவ்வாறான ஓர் அறிக்கையை பகிரங்க படுத்தினார்கள்.
அதுதான்
மல்வான மக்களே...!
இந்த நாட்டில் அவ்வப்போது ஏற்பட்ட அனர்த்தங்கள் பின்னணியில் எமது ஊர் பாதிக்கப்பட்ட சந்தர்பங்களில் வெளிமாவட்ட உறவுகள் பலதரப்பட்ட முறையில் நமக்கு உதவினார்கள்.
குறிப்பாக 2016 ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் நாம் கடுமையாக பாதிக்கப்பட்டோம்.எழுந்து நிற்க முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டோம்.
அந்த சந்தர்ப்பத்தில் வெளிமாவட்ட மக்கள் நமக்கு தாராளமாக உதவினார்கள்.
இன்று நாம் அவர்களுக்கு உதவும் பாக்கியத்தை இறைவன் நமக்கு தந்துள்ளான்
ஆகவே நாம் அனைவரும் அவர்களை நோக்கி தாராளமாக உதவிக்கரம் நீட்டுவோம்.
இவ்வாறான இன்னும் சில சம்பவங்கள் இந்த அனர்தத்தின் போது எமது நாட்டில் நடைபெற்றதாக செவிமடுத்தேன்.
அல்லாஹ் இவ்வாறான நன்றி உணர்வோடு செயல்படும் அனைவருக்கும் அருள் புரிவானாக.
இதற்கு சமமான மற்றுமோர் விடயம் எனது நினைவில் வருகிறது
அதாவது இந்த அனர்தத்தின் போது பலஸ்தீனத்தின் காசாவை சேர்ந்த சில உறவுகள் இவ்வாறு கூறினார்கள்.

அன்று இஸ்ரவேலர்கள் எம்மை தாக்கும் போது இலங்கை மக்கள் எமக்காக தொழுகையின் போதும் வேறுபட்ட முறைகளிலும் பிரார்த்தனைகள் செய்தார்கள் இன்று நாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நிற்கும் அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றோம்,என்பதாக.
- இச்சந்தர்ப்பத்தில் யார் எல்லாம் மனத்தூய்மையுடன் தார்மீகப் பனியில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருத்திக் கொள்வானாக...
- அவர்கள் கொடுத்ததை விட பன்மடங்கு நல்லதை அவர்களுக்கு திருப்பி கொடுப்பானாக...
- அவர்கள் செய்த தார்மீகப் பணிகளின் காரணமாக அவர்களது சொத்து செல்வங்களை பாதுகாப்பானாக...
- அவர்களின் வதிவிடத்தை சுவனத்தில் அமைத்து கொடுப்பானாக...
- மேலும் இச்சந்தர்ப்பத்தில் வபாதாகிய அனைவருக்கும் ஷஹீதுடைய அந்தஸ்தை கொடுப்பாயாக....
- உறவுகளையும் சொத்துக்களையும் இழந்தவர்களுக்கு மன ஆறுதலையும் பொறுமையையும் வழங்குவாயாக...
- ஆமீன்.
இறுதியில் திருக்குறளில் கூறப்பட்ட திரு வள்ளுவரின் ஓர் போதனையுடன் விடைப் பெறுகின்றேன்.
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று."
M.H.M நியாஸ் ( J P : Whole island )
Chairman : Media Link
(Communication Centre For Community Development)
Director : National Peace Council Of Sri Lanka

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments