Ticker

6/recent/ticker-posts

உலகில் வித்தியாசமான முறையில் குழந்தைகளை பெற்றெடுத்த அம்மாக்கள்!

வித்தியாசமான முறையில் குழந்தைகளை பெற்றெடுத்த அம்மாக்கள்:
1.) WOMEN GIVES BIRTH TO HER GRANDCHILD:
ஆஸ்திரேலியாவில் உள்ள வேல்ஸ் மாகாணத்தில் TRACEY என்ற ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் பிரச்சனை இருந்துள்ளது. அதன் காரணமாக அந்த பெண்ணால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த பெண்ணின் தாயார் EMMA MILES என்பவர் அவருக்காக குழந்தையை பெற்றுக் கொடுத்துள்ளார். அவரின் 53-வது வயதில் ஒரு வாடகைத் தாயாக இருந்து இக்குழந்தையை பெற்றுக் கொடுத்தார். அதாவது TRACEY-யின் கருமுட்டையில் அவர் கணவரின் விந்தணுக்களை செலுத்தி EMMA MILES உடலில் வைத்து அக்கருவை வளர்த்து குழந்தை பெற்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2.) AGE DIFFERENCE SIBLINGS:
எலிசபெத் என்ற பெண்மணி ஒருவர் அவரின் 19-வது வயதில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அதன் பிறகு அந்த பெண்ணின் 60-வது வயதில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு குழந்தைகளுக்கும் 41 வருடம், 185 நாட்கள் வித்தியாசம் ஆகும். அதிக வருட இடைவெளி விட்டு குழந்தை பெற்று கொண்ட அந்த பெண் உலக சாதனை படைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

3.) WORLD’S SMALLEST BABY:
கடந்த 2018-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த ஒரு குழந்தையின் எடை ஆனது 243 கிராம் மட்டுமே ஆகும். அக்குழந்தையின் பெயர் SAYBIE. குறிப்பாக 23 வாரம் 3 நாட்களிலேயே குறை பிரசவத்தில் இக்குழந்தை பிறந்துள்ளது. அதிக நாட்களுக்கு முன்பாகவே பிறந்து உயிர் வாழ்ந்த குழந்தையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை பிறந்து 5 மாதத்திற்கு மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

4.) SUPER OCTOMOM:
SUPER OCTOMOM என்று பிரபலமாக அழைக்கப்படும் NADYA SULEMAN என்ற பெண்மணி அவரின் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளை பெற்றெடுத்தார். 2009-ஆம் ஆண்டு அவர் கருவுற்று இருந்த போது இரண்டு குழந்தைகள் மட்டுமே அவரின் வயிற்றுக்குள் இருந்துள்ளது. பின்னர் அவரின் மருத்துவர் ஒருவர் 12 கருவை அந்த பெண்ணின் வயிற்றில் செலுத்தி உள்ளார். அதனால் அவரின் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பிறந்துள்ளது. அதன் பின்னர் 6 குழந்தைகளை பெற்றெடுத்தார். மொத்தம் அவருக்கு 14 குழந்தைகள். அதன் பின்னர் தவறான வழியில் நடந்துகொண்ட அந்த மருத்துவரின் உரிமம் ஆனது ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் நடந்த பின்னர் இந்த பெண் மிகவும் பிரபலம் ஆனார். 14 குழந்தைகளுடன் அப்பெண் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

5.) BRITAIN SURROGATE MOM:
CAROLE HARLOCK என்ற பெண்மணி 15 வருடத்தில் 20 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அதாவது வாடகை தாயாக இருந்து குழந்தைகளை பெற்றுக் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் அவர் மேலும் குழந்தை பெற்றுக்கொண்டால் அவரின் உடல் நிலை மற்றும் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். கடைசியாக குழந்தை பெற்ற பின்னர் அவர் அளித்த ஒரு பேட்டியில் நிறைய பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் வாழ்கிறார்கள். குழந்தை இல்லாத மன வலியை உணர்ந்து நான் வாடகை தாயாக இதை ஒரு சேவையாக செய்து வருகிறேன் என்று கூறினார். இதற்கு மேல் குழந்தை பெற்று கொடுக்க முடியாதது வருத்தமான ஒன்றாகும் என்றும் கூறினார்.
themysteryinfo

Post a Comment

0 Comments