குருதி அழுத்தத்தை கட்டுப்படுத்த என்ன வழி?

குருதி அழுத்தத்தை கட்டுப்படுத்த என்ன வழி?

நான் இரண்டு வருடங்களாக பிரசர் மாத்திரை பாவித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் பிரசர் கட்டுப்படாமல் இருக்கிறது. எனக்கு வயது 36. இதற்கான காரணம் என்ன? வேறு ஏதாவது மருந்துகள் உள்ளனவா?
கைருதீன், காலி


அதிக குருதி அழுத்தம் அல்லது | High blood pressure என்பது சாதாரணமாக இரத்த நாடியினுள் இருக்கக்கூடிய அழுத்தத்தை விடவும் தொடர்ச்சியாக அதிகமாக இருக்கக்கூடிய அழுத்த திலையைக் குறிக்கும்.

இரத்த நாடியினுள் அழுத்தம் கூடும் போது இருதயம் சாதாரணமாகத் தொழிற்படுவதைவிடவும் கூடுதலான அழுத்தத்தைப் பிரயோகித்தே இரத்த நாடிகளுக்கு இரத்தத்தைச் செலுத்த வேண்டியேற்படும். இவ்வாறு தொடர்ச் சியாக பல வருடங்களுக்கு இருதயம் சிர மத்துடன் இயங்கும் போது நாளடைவில் இருதயத்தின் தொழிற்பாட்டிலும் பல பிரச்சினைகள் ஏற்படுவதோடு சிறுநீரகம், மூளை, கண் போன்ற உறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன.

ஒரு இறப்பர் குழாயினூடாக நீர் செல்லும் போது பல்வேறு காரணிக ளினால் குழாயினுள் அழுத்தம் கூடினால் இறுதியில் குழாய் வெடிக்கவும் செய்கின் றன. இரத்த நாடி என்பதும் ஒரு இறப்பர் குழாய்க்குச் சமனாகும். எனவே இரத்த நாடிக்குள்ளும் ஏதாவது அழுத்தம் கூடி இரத்தக் குழாய் வெடிக்கும் அளவுக்குச் செல்லலாம்.

எமது முன்னோர்களுக்கு இந்நோய் மிகவும் அரிதாகவே காணப்பட்டது. காரணம் அவர்கள் இயற்கை உணவுக ளையும் உடற்தொழிற்பாட்டுடன் கூடிய சுறுசுறுப்பான மன அழுத்தமற்ற வாழ்க் கையைக் கடைப்பிடித்ததால் ஆகும்.

ஆனால் தற்போது இந்நோயினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அபாய எச்சரிக்கை கொடுக்கக் கூடியள வுக்கு கூடிக் கொண்டே செல்கின்றன. காரணம் நாம் எமது முன்னோர்களைப் போன்று இயற்கை விதிமுறைப்படி நடக்காமல் சகல விடயங்களிலும் இயற் கைக்கு மாறாக நடப்பதால் ஆகும். 

நாம் இயற்கை உணவுகளை இயற்கை முறையில் தயாரித்து உண்ணுகின் றோமா? மேலும் நாம் எமது குறுகிய தூரப் பயணங்களைக் கூட வாகனத்தின் மூலமே செல்கின்றோம். மன உளைச்ச லற்ற வாழ்க்கை என்ற சொல்லை வார்த் தைகளால் மாத்திரமே கேட்கின்றோம்.

அதிக குருதி அழுத்தம் 40 வயதைத் தாண்டிய ஆண்களிடையே அதிகமாகத் தாக்குகின்றது. ஆனால் அதிக குருதி அழுத்தத்தின் காரணமாக உடம்பில் பாரிய தாக்கங்கள் ஏற்பட்டு அதிகமாக மரணத்தைத் தழுவுவதில் பெண்களே அதிகம். 

இந்நோய் செயற்படுவதற்கு மன அழுத்தம், புகைத்தல், அதி உடற்ப ருமன், அதிக உப்புத் தன்மை அல்லது கொழுப்புத் தன்மையுடைய உணவு வகைகளைத் தொடர்ந்து உட்கொள்வது, குடும்ப ஆதிக்கம், சில ஹோர்மோன் களின் தாக்கம் மற்றும் நீரிழிவு நோய், சிறுநீரக நோய் இரத்த நாடிகள் தடிப்ப டைதல் போன்ற நோய்களின் தாக்கங்க ளினாலும் ஏற்படலாம்.

அதிக குருதி அழுத்தத்தின் குறிகுணங் களாக தலையிடி, வியர்த்தல், தலைசுற்று, மூச்சுக் கஷ்டம், பார்வையில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் போன்றவைகள் காணப்படலாம்.

ஆனாலும் ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் மேற்கூறிய நோய் அறி குறிகள் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை என்பதாகும். இவர்கள் சுகதேகிகளைப் போன்றே தோற்றமளிப்பார்கள். இவர் களை அதிக குருதி அழுத்தத்தின் காரண மாக பாரிசவாதம், மாரடைப்பு, சிறுநீரகச்
செயலிழிப்புகள், பார்வையற்றுப் போதல் போன்றவைகள் ஏற்பட்டு வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்ட பின்பே இந்நோய் இருப்பதாகத் தெரிய வருகின் றன.

இந்நோய் இருப்பவர்கள் உப்பு உட் கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். உப்புக்குப் பதிலாக தேசிக்காய், புளி, கொறுக்காய் போன்றவற்றை மாற்றீடாகப் பாவிக்கலாம். ஆனால் இன்றைய நடை முறைப் பிரச்சினை ஒன்றுதான் உப்பு சாப்பிடுவதைக் கட்டுப்படுத்தும் படி கேட்டால் உப்பைக் குறைத்து கருவாடு, ஊறுகாய் போன்ற அதிக உப்புச் சத்துக் கூடியவற்றை உணவில் சேர்த்துக் கொள் கிறார்கள்.

எனவே இது போன்ற செயல்களினால் தான் மாத்திரைகள் உட்கொண்டாலும் நோயைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்றது. எனவே அதிக குருதி அழுத்தமுடையவர்கள் உணவில் மிகவும் கட்டுப்பாடாக இருந்தால் மாத்திரைக ளின்றியே நோயைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும். மிருகக் கொழுப்பு அதிகமாக இருக்கும். மாட்டிறைச்சி போன்ற உணவுகளையும் எண்ணெயில் பதனிடப்பட்ட உணவுகளையும் முற்றாகத் தவிர்ப்பதோடு உப்பு உட் கொள்வதையும் கட்டுப்படுத்த வேண்டும்.

மாதத்திற்கு 3 தொடக்கம் 5 நாள் வரையும் தகுந்த உணவுகளை உட்கொள் வதன் மூலமும் இந்நோயைக் கட்டுபப்ப டுத்தலாம் என மருத்துவத்திலும் பரிந்து ரைக்கப்பட்டுள்ளது.

உணவில் கட்டுப்பாடாக இருப்பதைப் போலவே தொடர்ச்சியான உடற்பயிற்சி சியும் மன அழுத்தமற்ற வாழ்க்கையும் இந் நோய்க்கு முக்கியமாகும். 

நவீன வைத்தியத்துறையில் அதிக குருதி அழுத்தத்தைக் குறைப்பதற்காகப் பல வகையான மாத்திரைகள் இருந்த போதிலும் அவைகளுக்குப் பல பக்க விளைவுகள் இருப்பதன் காரணமாக இந் நோய்க்கு நிர்ணயிக்கப்பட்டவுடனேயே மாத்திரைகள் சிபாரிசு செய்யப்படுவ, தில்லை. உணவுக் கட்டுப்பாடு போதிய ளவு உடற்பயிற்சியில் ஈடுபடச் செய்தல் மூலமே நோயை கட்டுபடுத்த முயற் சிக்கலாம்.

யுனானி வைத்தியத்துறையிலும் பக்க விளைவுகளற்ற பல சிகிச்சை முறைகள் இருப்பதோடு மருத்துவத்தின் தந்தை, யான ஹிப்போகிரடிஸ் குறிப்பிட்டுள்ள "உங்கள் உணவுகளையே உங்கள் மருந்தாக்கி கொள்ளுங்கள்" என்ற கூற்றிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்ப டுகின்றது. அத்துடன் நபி வழி மருத்துவத்தின் சுன்னா முறைகளில் ஒன்றான "ஹிஜாமா" வும் இந் நோய்க்கு சுகத்தைக் கொடுகக்கவல்லது. 

இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக அதாவது அனேகமான அதிக குருதி அழுத்த நோயுடையவர்களுக்கு நோய் அறகுறிகள் தென்படலாம். 

உடம்பில் பாரிய தாக்கம் ஏற்பட்டு பாரிசவாதம், மாரடைப்பு, சிறுநீரக செயலிப்பு போன்ற நோய்கள் ஏற்படுதைத் தவிர்க்க வேண்டுமானால் குறுகிய காலத்திற்கொருமுறை உங்கள் குருதி அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

DR.M.H.M.NAZEEM

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post