தொடர் ஓட்டம்!

தொடர் ஓட்டம்!




உடன்சென்று பள்ளியிலே விட்டுவிடும் வாழ்க்கை
கடந்துபோகும்! வந்துவிடும் கல்லூரி வாழ்க்கை
நடைபோடும் பேரழகைக் கண்டேதான் நாமும்
படைபோன்ற கம்பீரம் கொள்வோம்ரசித்து!
அடலேறாய்ப் போய்வருவார் பார்.

படிப்பை முடித்துப் பணிக்களம் செல்வார்!
படிப்படியாய் முன்னேற்றம் இல்லறம் காண்பார்!
வியந்தேதான் பார்ப்போம் வளர்ச்சியைப் பார்த்து!
அவரவர் வாழ்க்கையே மூச்சு.

வாழ்க்கை தொடர்ஓட்டம் போலத் தொடர்ந்திடும்!
ஆட்கள்தான் மாறுவார் ஓட்டமோ மாறாது!
காட்சிகள் மாறமாற நாளும் இயங்குவார்!
மாற்றமே மாறா தது.


Post a Comment

Previous Post Next Post