
சோமாலியாவில் 5 வயதுக்கும் குறைந்த 1.5 மில்லியன் சிறுவர்களுக்கு மந்தபோசனை நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் மூன்று இலட்சத்து 56 ஆயிரம் பேர் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் உயிரிழக்கக்கூடிய அபாயம் இருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


சோமாலியாவில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழையின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
![]()


0 Comments