அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாசபை மற்றும் ஏனைய இஸ்லாமிய அமைப்புகளிடமும் முன்வைக்கும் ஆலோசனைகள்

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாசபை மற்றும் ஏனைய இஸ்லாமிய அமைப்புகளிடமும் முன்வைக்கும் ஆலோசனைகள்


𝐑𝐢𝐧𝐓𝐯 மற்றும் ℹ️ 𝐌𝐞𝐝𝐢𝐚  இனைந்து வரலாற்றில் முதல் முறையாக 07/06/2022 ஆம் திகதி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மற்றும் அதி உயர் பீட உறுப்பினர்களை சந்தித்து  முஸ்லிம் சமூகம் சார்பில் ஒரு மஹஜர் கையளிக்கப்பட்டது.

அதன் முழு விபரங்களையும் தொடர்ந்து படிக்கவும்.  

பகுதி 01
1.அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை சமூக அமைப்பாக இயங்க வேண்டும். 

2.அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையில் நிறுவப்பட்டுள்ள அனைத்துத் துறைகளிலும் பொதுக் கல்வி கற்ற துறை சார்ந்த நிபுணத்துவம் உள்ளவர்களை இணைத்துக்கொள்ள வேண்டும். 

3.இலங்கையில் இயங்கக்கூடிய முஸ்லிம் சமூகம் சார்ந்த அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து ஒரு பொது நிர்வாகத்தின் கீழ் இயங்க வேண்டும். (Nator Guidance Forum) இவ்வாறான ஒரு அமைப்பை உருவாக்கி இயங்குவதற்கான ஒரு யாப்பை நாங்கள் ஒப்படைக்கிறோம். 

4.அனைத்து இஸ்லாமிய அமைப்புகளுக்கும் பொதுவான ஒரு ஊடகம் உருவாக்கப்பட வேண்டும். 

5.பொறுப்பு வாய்ந்த ஒரு வடகத்தை உருவாக்கி வெற்றிகரமாக வழி நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து தருவதற்கும் வலி நடத்துவதற்கும் Retable independent Network (RinTv யின் இணைந்த ஊடக வலையமைப்பு தயாராக உள்ளது இது தொடர்பாக ஏற்கனவே ஜம்மியத்துல் உலமா சபையுடண் பேச்சுவார்த்தைகள் நடத்தியமை குறிப்பிடத்தக்க விடயம்.

மேற்கொண்டு ஊடக உருவாக்கம் தொடர்பாக எங்களை தொடர்பு கொள்ளலாம்ளா079977. 

6. பாராளுமன்றத்திட்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எதிரான தனிநபர் பிரேரணைகளை ஆய்வுக்கு உட்படுத்துவது இஸ்லாமிய புத்திஜீவிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு பிரச்சினைகளாக முன் வைக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களுக்கும் பகிரங்க பதில் அளிக்க வேண்டும். 

7.இஸ்லாத்திற்கு முரணாக எவரொருவர் ஊடகங்களில் கருத்து தெரிவித்தாலும் அவர்கள் கருத்துத் தெரிவித்த அதே நிகழ்ச்சி நிரலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பாக பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையால் பதில் அளிக்க முடியாவிட்டால் விமர்சனத்துக்கு உட்பட்ட தலைப்பின் கீழ் சமத்தப்பட்ட துறைசார்ந்த நிபுணத்துவம் உள்ள ஒருவரை நியமித்து ஊடகத்தில் பதில் அளிக்கவேண்டும். 

8.முஸ்லிம் நாடுகளினால் இலங்கைக்கு செய்து கொடுக்கப்பட்ட அனைத்து சேவைகளையும் பகிரங்கமாக ஊடகங்களில் தெரியப் படுத்த வேண்டும். 

9. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் சர்வதேசம் வரையில் சென்று ஒத்துழைத்த அனைத்து விடயங்களும் பகிரங்க ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும். 

10. சர்வதேச இஸ்லாமிய சமூகம் இஸ்லாமிய விரோதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட அனைத்து இயக்கங்களையும் இலங்கையிலும் பகிரங்கமாக அடையாளப் படுத்தி தடை செய்யப்பட வேண்டும்.

பகுதி 2
மதரசாக்கள்

1.புதிய மதரசாக்கள் உருவாக்குவதை கட்டுப்படுத்த வேண்டும். 

2.இலங்கையில் இருக்கக்கூடிய மதரசாக்கள் தரம் உயர்த்தப்பட வேண்டும். 

3.மதரசாக்கள் முஸ்லிம் கலாச்சார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் கீழ்

பதியப்பட்டு கண்காணிக்கப் பட வேண்டும். 

4.அனைத்து மதரஸாக்களிலும் பொது பாடத் திட்டம் அமல் படுத்தப்பட்டவேண்டும்.

5.மதரசாக்களில் மார்க்கக்கல்வி கற்று முடித்த உடன் தொடர்ந்து தொழில்

பயிற்சிகளுக்கான கல்வித்திறன் வழங்கப்பட வேண்டும். 

6.மதரஸாக்களில் குவாசி நீதிபதிகளுக்கான இஸ்லாமிய சட்டக் கல்வி கற்பிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கி உலமாக்கள் வெளியேற்றப்பட வேண்டும்.) 

7.தொழில் மற்றும் தொழில்றுட்பக் கல்விகள் வழங்கப்பட வேண்டும்.

8.அரசியல் மற்றும் ஆன்மீக தலைவர்கள் மற்றும் பட்டம் பெற்ற உலமாக்கள் அனைவருக்கும் தலைமைத்துவ பயிற்சி வழிகாட்டல் தொழில்துறை வழிகாட்டல் போன்றவற்றை வழங்கு வதற்காக training college ஒன்று உருவாக்கப்பட வேண்டும். 

9.மேலே குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளை துறை சார்ந்த நிபுணத்துவம் உள்ளவர்களுடன் ஆலோசனை செய்து சமூகத்திற்கு வழிகாட்டக்கூடிய உலமாக்களை உருவாக்கித் தரும்படி வேண்டிக் கொள்கிறோம். 

10.மேலே குறிப்பிடப்பட்ட வேண்டு கோள்களை நடைமுறைப் படுத்த தொடர்ந்தும் ஆலோசனைகள் செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

குவாசி நீதிமன்றம்
1.குவாசி நீதிமன்றங்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் செயல்பட வேண்டும். 

2. சலீம் மர்குக் அவர்களால் முன்வைக்கப்பட்ட முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட புதியஆலோசனை அவசரமாகசெயல்படுத்தப்பட வேண்டும்.

3.சமூக வழிகாட்டல் கல்வி வழிகாட்டல் மற்றும் நன்னடத்தை சமூக மேம்பாடு/ அரச தொழில் ஊக்குவிப்பு / போன்ற விடயங்களில் கவனம் செலுத்துவதற்கு தனி தனி குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழு நாடளாவிய ரீதியில் செயல்பட வேண்டும். 

4.அடையாளம் காணப்பட்ட தரமில்லாத குவாசிகள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்,

5.மத்ரஸா கற்கைநெறி மூலம் குவாசிகள் உருவாகும் வரை மிகவும் நிதானமான முறையில் குவாசிகள் நியமிக்கப்பட வேண்டும். 

6.குவாசி மன்றங்களில் வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். 

7.தீர்ப்புகளிள் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். 

8.தீர்ப்பு வழங்கும் போது மேல்முறையீட்டுக்கு வழிகாட்ட வேண்டும். 

9.இஸ்லாத்தை தழுவியவர்களின் வழக்கு விசாரணையில் தெளிவான தூரநோக்கு இருக்க வேண்டும். 

10.நஷ்ட ஈடு தாட்பரியம் வழங்கும் விடயத்தில் ஆண்களின் தொழில் வருமானம் தெளிவாக அவதானிக்கப்பட்டு சட்ட திட்டங்களை தெளிவுபடுத்தி தீர்ப்புகள் எடுக்கப்பட வேண்டும்.

சுருக்கம்
ஒவ்வொரு ஊர்களிலும் அனைத்து பள்ளி நிர்வாகங்களையும் ஒன்றிணைத்த ஒரு அமீர் நியமிக்கப்பட்டு அவர் தலைமையில் தலைமைத்துவ பீடம் உருவாக்கப்பட வேண்டும். 

மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களை அவதானித்து செயல்படுத்தும்போது அந்த அந்த துறை சார்ந்த நிபுணத்துவம் உள்ளவர்களின் ஆலோசனைகளை உள்வாங்கி அரச அங்கீகாரம் பெற்று செயல் படுத்த வேண்டிய விதிமுறைகளை கவனத்தில் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும். 

உலமாக்களின் விடயங்களில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை நேரடியாக கவனத்தை செலுத்த வேண்டும். பிறவினை / ஏற்றத்தாழ்வு ! கொள்கை போன்ற விடயங்களால் உலமாக்கள் கைவிடப்படக் கூடாது). 

பள்ளிவாயல்கள் விடயத்தில் வக்பு சபைக்கு உலமாக்களின் தெளிவான வழிகாட்டுதலை பெற்று மக்களுக்கு வழிகாட்டல்களை வழங்க வேண்டும். 

குவாசி சம்பத்தப்பட்ட விடயங்களில் நீதி அமைச்சு குவாசிகள் மன்றம் சட்ட ஒழுங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முஸ்லிம் கலாச்சார அமைச்சு அனைத்து துறை சார்ந்தவர்களின் ஆலோசனை பெற்று திட்டவட்டமான முடிவுகள் அவசரமாக எடுக்கப்பட்டு வழிநடத்த வேண்டும். 

இலங்கையில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்றிணைந்து சமூகத்திற்கான ஒரு ஊடகத்தை உருவாக்க வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் இணைந்த ஊடக வலை அமைப்பாக Reliable Independent Network (RinTv) தொடர்ந்து உங்களுடன் செயல்பட தயாராக இருக்கின்றோம் என்ற விடயத்தை அறியத்தருகின்றோம்.

நன்றி வஸ்ஸலாம்
இப்படிக்கு
(Yasir Rizvi - London (on behalf of Rin TV) ஒன்றிணைந்த சமூக ஊடக வலையமைப்புகள் Rin TV combined with iMedia)





மஹஜர் கையளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 
















1 Comments

Previous Post Next Post