Ticker

6/recent/ticker-posts

அழகான பெண்

தாய்மை உறுதியாகி விட்டதை தன் கணவனுக்கு முதன் முதலில் வெட்கத்துடன் சொல்லும் தருணத்தில் பெண்_அழகாகிறாள்  

முதன் முதலாய் சேலை உடுத்தி தெருவில் நடக்கும் போது அந்த வெட்கத்தில் உதட்டை சுழிக்கும் போதெல்லாம் பெண் அழகாகிறாள்.
.
அதிகாலையில் வாசலில் கோலம் போடுகையில் முந்தானையை இழுத்து பாவாடைக்குள் சொருகி தன் வலது கையை நெற்றியில் துடைக்கும் நேரத்தில் பெண் அழகாகிறாள்..

அவிழ்ந்த கூந்தலை அனாசியமாக அள்ளி முடித்து கொண்டை போட்டு அடுத்த வேலைக்கு ஆயத்தமாவாளே அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள்..

தன் மகளுக்கு சிக்கெடுத்து தலை சீவிஅந்த ஜடையை போட சீப்பை தன் தலையில்வைத்து இரு உதடுகளை முறுக்குவாளே
அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள்

சமைக்கும் போது கரண்டியால் ஒரு சொட்டு குழம்பை உள்ளங்கையால் நக்கி பார்த்து ஒரு கண்ணை மூடிஒரு கண்ணை அகல திறப்பாளே அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள்..

தலைக்குளித்த ஈரக்கூந்தலில் வழியும் நீர் பின் பக்க ரவிக்கையில் நனைந்து அந்த ஈரச்சுவடு தெரியகோவிலுக்குவருவாளே  அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள்

அரக்க பறக்க எழுந்து குளித்து ஒரேயொரு ஸ்டிக்கர் பொட்டுடன் கழுத்தில் கவரிங்செயினுடன் பேருந்தை எதிர்பார்த்து தவிப்புடன் நிற்கும் சமயத்தில் எல்லாம் பெண் அழகாகிறாள்..

பிரசவ அறையில் பிஞ்சு குழந்தையை பெற்ற பரவசப்பில் உதடு கடித்து கூந்தல் கலைத்து முகம் வெளிறி தன் கணவனை எதிர்பார்ப்பாளே அப்பொதெல்லாம் பெண் அழகாகிறாள்

ஏதோ ஒரு மன உளைச்சலில் இருகரம் பற்றி நெஞ்சில் புதைந்து மனம் வலித்து  அழுபவனை தாங்கி மனதை தேற்றி ஆறுதல் சொல்பாளே அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள்

இடுப்பில் குழந்தையை ஏற்றி கையில் பருப்பு சாதத்தை பிசைஞ்சு நிலாவை  காட்டியோ  தெருவில் பூச்சாண்டி கிட்ட புடிச்சு கொடுத்துருவேன் சொல்லியோ உணவு ஊட்டும் போதெல்லாம் பெண் அழகாகிறாள்..

பேசும் போது காதில் இருக்கும் கம்மல் ஆடுவதை பார்த்தால் இவள்பேசுவதற்காக அது தாளம் போடுகிறதோ என்று நாம் நினைக்கும் போது எல்லாம் பெண் அழகாகிறாள்..

துரோகங்களையும்_வேதனைகளையும் அளவுக்கு அதிகமாக தாங்கிய சமயத்தில் இன்னும் நடப்பதற்கு ஒன்றும் இல்லையடா
ஏமாறுவதற்கு நெஞ்சில் இடம் இல்லைடா  என்று கண்ணில் நீர் தளும்ப மனதால் தன்னம்பிக்கை கூடி திமிர் கூடும் போதெல்லாம்
பெண் அழகாகிறாள்

இல்லை இல்லை
பேரழகி ஆகிறாள்...
சரசு .மலேசியா 




Post a Comment

0 Comments