Ticker

6/recent/ticker-posts

Ad Code

நலம் வாழ -மருத்துவப் பகுதி -4

சென்ற வார தொடர்ச்சியில் நாம் உண்ணக்கூடிய உணவானது நமது வாயில் செரிமானம் ஆகின்றது என்று பார்த்தோம்.

 சரி உணவு என்றால் என்ன?... எவற்றை நமது உடல் ஏற்று கொள்கிறது ?
எதை நமது உடல் வெளியேற்றி விடுகிறது?.. எதை உண்ண வேண்டும்?.. எப்படி உண்ண வேண்டும் ?

உணவு! உணவு! எங்கு சென்றாலும் உணவு தான், உணவுக்கு என்று ஒரு தனி இடம் இருக்கின்றது, ருசிக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது, சரி நாம் ருசிக்காக உண்ண வேண்டுமா? அல்லது உடல் ஆரோக்கியத் திற்காக உண்ண வேண்டுமா?   

 இதற்கு இடையில் உணவே மருந்து என்று சிலரும், மருந்தே உணவு என்றுசிலரும், மூன்று வேளையும் மருந்தாக எடுத்துக் கொள்பவர்களும் இருக்கின்றனர். சரி, நாம் உண்ணக்கூடிய உணவு வாயில் இட்டு சுவைத்து, சுவைத்து, உண்ணுகிறோம். பழக்கூழ் அரிசி உணவு, அசைவ உணவு, ஊட்டச்சத்து மாத்திரைகள்,     உடல் சரியில்லை என்றால் நோய்க்கான மருந்துகள் என்று அனைத்தையும் தேர்ந்தெடுத்து உண்ணுகிறோம். காலை ,மாலை, இரவு என்று சரியான நேரத்தில் சிலரும்.
 நேரம் தவறி உணவு உண்பவர்கள் எனச் சிலரும் ,கிடைத்த உணவை உண்ண முடியாமல் சிலரும், உண்ண உணவே கிடைக்காத நிலையில் சிலரும், கடமைக்காக உண்பவர்கள் சிலரும் நம்மில் இருக்கத்தான் செய்கின்றனர்.

சரி ,ஏன் இந்த உணவு மாறுபாடு, அனைவருக்கும் ஒரே உணவு இருந்தால் என்ன ?ஏன் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு காலச் சூழல்களுக்கு ஏற்றவாறு உணவு மாறுபடுகிறது, இவ்வாறு மாறுபாடுள்ள உணவை, எங்ஙனம் புசிப்பது சரியான சரிவிகித உணவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது ?நாம் உண்ணும் உணவு தான் நம்மை நோயிலிருந்து பாதுகாக்கிறது அல்லது நோய் வர காரணமாக அமைகிறது. எனவே, உணவின் வகைகள் என்ன நமது உணவை எவ்வாறு நமது உடலுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம்.

 முந்தையத் தொடரில் கூறியது போல உணவிற்கும் நமது உணர்வுகளுக்கும் தொடர்பு உள்ளதா? உணவை நன்கு மென்று உண்ணும்போது ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி நாம் இந்த வாரம் பார்க்கலாம்.

 உடல் என்னும் இயந்திரம் நன்றாக இயங்க உணவு அவசியம் .

எவ்வாறு ஒரு வாகனம் இயங்க எரிபொருள் அவசியமோ ,அதுபோல உடல் இயங்குவதற்கு உணவு அவசியம். 

சரி., எவ்வாறு நாம் உணவை எடுத்துக் கொள்வது என்று பாப்போம் .

நாம் உண்ணும் உணவை மூன்று வகையாகப் பிரிக்கலாம்..
அதில் ஒன்று உடலுக்கு சக்தி அளிப்பவை,
இரண்டாவது உடலை வளர்ப்பவை,
மூன்றாவது உடலை பாதுகாப்பவை  என்று பிரிக்கலாம்.

 நாம் எந்த உணவை  சாப்பிடும் பொழுதும் இந்த மூன்று வகையாக நமது உடல் பிரித்துக் கொள்கிறது.

 எடுத்துக்காட்டாக குழந்தை பிறந்தது முதல் குறிப்பிட்ட வயது வரை உடலின் வளர்ச்சிக்கான உணவும், வளர்ந்த பிறகு இளமைக் காலத்தில் சக்தி அளிக்கும் உணவு வகைகளும், வயதானவர்களுக்கு உடலை பாதுகாக்கும் உணவு வகைகளும் அதிகமாகத் தேவைப்படும்.

 ஆனால், இம்மூன்றும் ஒவ்வொருவருடைய தினசரி தேவையாக இருக்கிறது.
  
 எவ்வாறு எனில் மூன்று வகையான உணவை சரியான விகிதாச்சாரத்தில் எடுக்கும் பொழுது அதாவது அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் சக்தி அளிக்கக்கூடிய உணவு வகைகளை அதிகரித்து உண்ண வேண்டும் .

உடல் உழைப்பு குறைந்தவர்கள் உடலை பாதுகாக்க கூடிய உணவு வகைகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 சரி, இப்படியே சக்தி அளிப்பவை வளர்ச்சி தருபவை ஒழுங்குபடுத்தும் உணவு என்று கூறுகிறீர்களே!! இதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று கேட்கிறீர்களா? இதோ வருகிறேன்.அதைத்தான் கார்போஹைட்ரேட், புரதங்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட், ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ்  என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர்.  

 அடுத்த வாரம் இதை விரிவாக உங்களுக்கான பதிலுடன்.உங்கள் சந்தேகங்களை தீர்க்க.சந்திக்கலாம்  என்றும். நன்றியுடன்,

டாக்டர் ஃபர்ஜானா பாத்திமா M.D(Acu).


தொகுப்பு.,
குறள் யோகி.,
தமிழ்ச் செம்மல் முனைவர்
மு.க.அன்வர் பாட்சா
கோவை., இந்தியா


 


Post a Comment

1 Comments

  1. Super... Very Nice Article... Good... Congratulations Dear 👍💖👍

    ReplyDelete