Ticker

6/recent/ticker-posts

Ad Code

முட்டாள் ஒருவர் கிடைத்த பின் ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து விலகுவேன் - எலான் மஸ்க்

ட்விட்டர் சிஇஓவாக ஒரு முட்டாளை பணியமர்த்திவிட்டு நான் சிஇஓ பதவியை விட்டு விலகுகிறேன் என எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

எலான் மஸ்க் ட்விட்டரின் சிஇஓவாக பதவியேற்றதில் இருந்தே அவரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் சுற்றி வருகிறது. இதற்கும் ட்விட்டர் மூலம் அடிக்கடி அவர் பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில், எலான் மஸ்க் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி ட்விட்டரில் தான் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா என கருத்துகணிப்பு நடத்தி இருந்தார். மேலும் இந்த கருத்து கணிப்பின் மூலம் தான் விலகலாமா வேண்டாமா என முடிவெடுக்கப்போவதாகவும் அறிவித்தார்.

அவர் நடத்திய ட்விட்டர் கருத்துக்கணிப்பில், 57.5 சதவீதத்தினர் எலான் மஸ்க் பதவி விலகவேண்டும் என தெரிவித்திருந்தனர். 42.5 சதவீதத்தினர் பதவி விலக வேண்டாம் என தெரிவித்திருந்தனர். இந்த முடிவு வந்தவுடன் எலான் மஸ்க் ட்விட்டரில் இதை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், “இந்த சிஇஓ பதவிக்கு ஏற்ற ஒரு முட்டாளை இந்த வேலையில் நான் பணியமர்த்திய பிறகு, நீங்கள் சொன்னது போல சிஇஓ பதவியிலிருந்து நான் விலகுகிறேன். அதற்கு பிறகு நான் வெறும் தொழில்நுட்ப பணிகளில் மட்டும் ஈடுபட உள்ளேன்” என தெரிவித்திருக்கிறார். அவரின் இந்த பதிவு பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
news18


 


Post a Comment

0 Comments