எதிரியே நமக்கு எப்போதும் உதவி செய்பவன்!

எதிரியே நமக்கு எப்போதும் உதவி செய்பவன்!

எதிரி நம்முடன் போராடுகின்றபோது,  நமது நரம்புகள் முறுக்கேற்றப்படுகின்றன. நம்முடைய திறமைகள் கூர்மைப் படுத்தப்படுகின்றன. அதனால் நமது எதிரியே நமக்கு எப்போதும் உதவி செய்பவன் என நம்புவோம்.

'ட்ரைடன்' என்ற கவிஞன் பின்வருமாறு தனது கவிதையொன்றில் குறிப்பிடுகின்றான்.

"விதியானது  தன்னுடைய எல்லா அம்புகளை என் மீது பாய்ச்சட்டும். எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, இன்னும் எதுவரினும் தாங்கிக்கொள்ளக்கூடிய ஓர் ஆன்மா 

என்னிடம் இருக்கின்றது. விதி எனக்குக் கட்டுப்படாததாய் இருக்கலாம். நானும் விதிக்குக் கட்டுப்பட்டவனல்ல. ஆன்மாவை வெற்றி கொள்ள என்னால் முடியும்."

கவிஞனின் வாக்கை உண்மைப்படுத்தும் நிகழ்வொன்று  அமெரிக்காவில் நடந்துள்ளது. 

உலகில் மிகவும் பிரபல்யமான செய்தித்தாலான "நியுயோர்க் ஹெரால்ட்" பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அதைத் தொடங்கியவர் 'ஜேம்ஸ் கார்டேன் பென்னெட்' என்பவர். 

செய்தித்தாள் தொடங்க முன்னர், அவர் தனது சொத்துக்களை ஒன்று திரட்டினார். மொத்தம் 300 டொலர்களே சேர்ந்தது. அந்த முதலை கொண்டு அவரால் எங்கோ ஒரு மூலையில் இருட்டறை ஒன்றைத்தான் வாடகைக்கு எடுக்க முடிந்தது. அங்கு இரண்டு பீப்பாக்களும்,  அதன் மேல் ஒரு பலகையுமே  அவரால் போட முடிந்தது. அச்சுக்கோர்ப்பவரும், ஆபீஸ் பையனும், பிரசுர கர்த்தாவும் அவராகவே இருந்தார்.  ப்ரூப்ரீடரும் அவர்தான், 

பத்திராதிபரும் அவர்தான். எல்லாமே அவராக இருந்து செயல்பட்டதால்தான், இன்று உலகிலேயே உயந்த நிலைக்கு வந்திருக்கின்றது,  நியுயோர்க் ஹெரால்ட்"!

-செம்மைத்துளியான்


 


Post a Comment

Previous Post Next Post