Ticker

6/recent/ticker-posts

Meta நிறுவனம் அதன் வேலைகளை மேலும் குறைக்கவிருக்கிறது: Financial Times

Facebook தளத்தை நிர்வகிக்கும் Meta நிறுவனம் வேலைகளை மேலும் குறைக்கவிருப்பதாக Financial Times நாளேடு தெரிவித்துள்ளது.

Meta நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆக அதிகமான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்த நிலையில் புதிய தகவல் வந்துள்ளது.

Meta நிறுவனத்தின் முடிவு குழப்பத்தை அளிக்கிறது என்று ஊழியர்கள் கூறியதாய் Financial Times நாளேடு குறிப்பிட்டது.

எதிர்வரும் வாரங்களுக்குத் திட்டமிட முடியாததால் எந்தவொரு வேலையும் செய்ய முடியவில்லை என்பது அவர்களின் ஆதங்கம்.

META நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் (Mark Zuckerberg) 2023ஆம் ஆண்டு செயல்திறன் மிக்க ஆண்டு என இதற்குமுன் வருணித்தார்.

எனினும், சூழ்நிலை இன்னும் தாறுமாறாகத்தான் இருக்கிறது என்று ஊழியர்கள் குறைபட்டுக்கொண்டனர்.

Whatsapp செயலியையும் நிர்வகிக்கும் Meta நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆயிரத்துக்கும் அதிகமானோரை ஆட்குறைப்பு செய்தது.

அது ஊழியர் எண்ணிக்கையில் சுமார் 13 விழுக்காடு.mediacorp



 


Post a Comment

0 Comments