
பாடல் - 3.
இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே – இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
விளக்கம்:
நமது உடம்பு நிலையில்லாத ஒன்று. இதை நாம் மெய் என்று நினைத்து, அதற்கு அத்தனை சிறப்புகளையும் செய்கிறோம். மெய் என்று கூறப்பட்டுவரும், இந்த உடல் பொய் என்பதை நன்கு உணர்ந்து, காலம் தாழ்த்தாமல் விரைந்து வறியவர்களுக்கு ஈகை செய்ய வேண்டும்.
ஊழின் வினைப்படி நல்ல செயல்கள் செய்து வாழ்ந்து முடித்தால், சொர்க்கம் கதவைத் திறந்து வைத்து வரவேற்கும்.
பாடல் - 4.
எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் – கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.
விளக்கம்:
கண் பார்வை இல்லாதவன், மாங்காய் அடிக்க முயற்சி செய்து அவன் கையில் வைத்திருக்கும் குச்சியை இழப்பதைப் போல், ஒருவன் சரியான காலத்தை அறியாமல் ஒரு செயலைச் செய்தால் அவன் தன்னிடம் உள்ளதையும் இழக்க நேரிடும். உகந்த நேரம் வரும் வரை நாம் செய்யும் எந்த முயற்சியும் பலன் தராது. அதனால் காலம் கருதி ஒரு செயலைத் தொடங்க வேண்டும்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments