
வண்டி ஓட்டிப் போறவரே
வாஞ்சையுள்ள மச்சானே.
வஞ்சி நெஞ்சம் கெஞ்சுதையா
வாசல் வரை வந்தாலென்ன.
மல்லிகை மனசுக்காரி நானாக்கும்
மணக்கல்லையோ நோக்கும்.
மாம்பழக் கன்னத்திலே நித்தம்
மயக்கும் முத்திமிட்டாலென்ன.
மிருதங்கம் போலோரு மேனி
மருது உனக்கான தோணி.
மித்திரனே இல்லையடா நித்திரை
மச்சானே நீக்கடா மறவுத்திரரை.
கடகடவண்டி குடுகுடுன்னு ஓடையிலே.
கனகவள்ளி மனசும் ஓடுதையா.
கரடுமுரடான பாதை போலே.
கற்பனையும் தாறுமாறாகுதையா.
பைத்தியத்துக்கு வைத்தியம் நீயே
பையிலே மஞ்சள் கயிரோடுவாயேன்.
பைங்கிளியைப் ஒருநொடி பாரேன்
பைங்கொடி இடையும் தேரே
ஆர் .எஸ் . கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments