Ticker

6/recent/ticker-posts

Ad Code



1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-2


குறள் 9:
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தானை வணங்காத் தலை.

நெறிபிறழாச் செம்மலை ஏற்க மறுத்தல் பொறியைந்தும் கொண்டும் இயங்கா நிலைக்கு பயனற்று போனதற் கொப்பு.

குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.

நெறிபிறழாச் சான்றோர் வழிமறந்தால் நீந்த முடியாது துன்பக் கடல்.

2.வான்சிறப்பு

குறள் 11:
வானின்றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

வான்மழை இவ்வுலகைக் காப்பதால் அம்மழை தேனமிழ்(து) என்றேதான் செப்பு.

குறள் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை.

பெய்தே உணவைத் தருகிறதுதானுமிங்கே நன்னீர் உணவாகும் சொல்

(தொடரும்) 

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments