நீங்கள் பிள்ளைகளை பெற்று சாத்தானிடம் பொறுப்புக் கொடுத்தால் அந்தப் பிள்ளை உறுப்படுமா?
நீங்கள் ஒருபோதும் அவ்வாறு செய்ய மாட்டீர்கள். ஆனால் சாத்தானின் வழிகாட்டும் இயந்திரத்தை பிள்ளைகள் கைகளில் கொடுத்து விடுகிறீர்கள். அதுதான் மொபைல் போன்கள். நவீன வாழ்வியலில் இன்றி அமையாத ஒரு பகுதியாக அது இருந்தாலும், கற்றளுக்கும் அது தேவை என்றாலும், அதுதான் அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் சாதனமும் அதுதான் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் . இன்னும் விரிவாகக் கூறினால் நாளைய உலகையே அனாச்சாரமாக மாற்றி அமைக்கும் இலகுவான ஆயுதமும் அதுதான் .
மனித மூளை என்பது அல்லாஹ்வின் பெரும் அற்புதம். நவீன விஞ்ஞானத்தினால் கூட அதில் இல்லச்சத்தில் ஒரு ஆற்றலையாவது முழுமையாக தெரிந்து கொள்ள மனிதனால் இன்னும் முடியவில்லை.
ஒரு நள்ள மனிதனை உருவாக்க பிறப்பில் இருந்து இறப்புவரை என்னென்ன அதில் சேர வேண்டுமோ, அதை விடுத்து பிழையான விடயங்கள் அங்கு சேரும் போது அவனையே அவை தலை கீழாக மாற்றி விடுகிறது.
மனித மூலையில் ஆழ்மனது 90% மனித நடவடிக்கைகளுடன் தொடர்பானது. நீண்ட ஞாபாகம், மன எழுச்சிகள் உணர்வுகள், பழக்க வழக்கங்கள், உறவு முறைகள், பழக்கங்களுக்கு அடிமையாதல், இயல்பான உடட்செயட்பாடுகள், ஆக்கபூர்வமான சிந்தனைகள், வளர்ச்சிப் படிகள், ஆன்மீக ஈர்ப்புகள், இயல்பூக்கம் போன்ற எல்லாமே அங்கு அடங்குகின்றன.
ஆழ்மனதானது புலன்கள் பெற்றுக் கொள்ளும் தகவல்களை கண்ணிமைக்கும் நொடிக்குள் மூளைக்கு அனுப்பி அதனை செயல்படுத்தும் அல்லது தகவலை சேமிக்கும். அவை நீண்டகால தகவல்களாக இருக்கும். இவ்வாறு சேமிக்கப்படுபவைகள் பிழையான அல்லது முரனான தகவல்களாக இருந்தாலும், அவற்றை ஏற்றுக் கொள்ளும் அல்லது செயல் படுத்தும் அளவுக்கு ஒருவரின் செயற்பாடு மாறலாம். இந்த வகையில் தான் சிறுவர்கள் வளரும் பருவத்தில், பாவிக்கும் மொபைல் போன்களுக்கு அடிமை (Addict )ஆவதையும், அவர்களது சிந்தனை போக்கு எல்லாம் மாரி, பண்பாடுகள் அற்ற, யாரையும் மதிக்காத, ஒழுக்கமற்ற ஜீவன்களாக மாறிவிடுகிறார்கள். இவ்வாரான ஒரு சமூகத்திலே வருங்கால சந்ததியின் உலகம் சாத்தானிய மயமாகத்தான் இருக்கும். இது புதிய உலக ஒழுங்கின் ஒரு அஜண்டாவாகவும் இருக்கிறது.
மொபைல் போன் ஸ்கிறீன் இல் வரும் ஒளி கூட கண்ககுக்கு ஆபத்தானது. அத்துடன் ஸ்கிறீனை தொடுவதன் காரணமாகவும் நரம்பியல் பாதிப்புகள் ஏற்படலாம்.
எனவே உங்கள் பிள்ளைகளிடமிருந்து மொபைல் போன், டப் என்பவற்றை தூரமாக்கி வையுங்கள். அவர்கள் விளையாடும் வீடியோ விளையாட்டுகள், பார்க்கும் காட்டூன்கள் என்பன மூளைச்சவரம் செய்யப் படுபவையாகவும் இருக்கலாம். அது அவர்களை மீட்க முடியாத அளவுக்குக் கூட வழி கெடுக்கும்.
சிறு வயதில் ஆழ்மணத்தில் பதிவதில் அநேகமானது தான் ஒருவரது எதிர்காலம். வன்முறை, அடித்தல், நொறுக்குதல்,ஆபாசம், பாலியல், இம்சை, திருட்டு துப்பாக்கிச் சூடு, கொலைசெய்தல் ,குண்டுத் தாக்குதல், போன்ற விருவிருப்பான உட்சாகமான காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்து பதிவுகளும் உங்கள் பிள்ளைகளை பாதித்தே தீரும்.
இன்றே எச்சரிக்கையாக இருங்கள். அவர்களுக்கு பிரயோசனமான விடயங்கள் விளையாட்டுக்களில் கவனத்தை மாற்றி விடுங்கள்.
Dr. Ajmal hassan.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments