
கேள்வி:
சூரியன் மறைவதற்கு சில வினாடிகளுக்கு முன் ஒரு பெண்ணுக்கு மாதத்தீட்டு வந்துவிட்டது. அவளது நோன்பின் நிலை என்ன?
பதில்:
இரத்தம் வெளியே வந்துவிட்டால் அவளது நோன்பும் முறிந்துவிடும். அவள் அதுவரை நோன்பு நோற்றதற்காகக் கூலி வழங்கப்படுவாள். அதற்குப் பகரமாக அவர் ஒரு நோன்பைக் கழாச் செய்ய வேண்டும். மாதத்தீட்டு ஏற்படுவதற்கான அடையாளங்களை அவள் உடலில் உணர்ந்து சூரியன் மறைவதற்குள் இரத்தம் வெளியே வராவிட்டால் அல்லது சூரியன் மறைந்த பின்னர் இரத்தம் வெளியே வந்தால் அவளது நோன்பு சரியான நோன்பாகும்.
(அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித்)
கேள்வி:
ஒரு பெண் பஜ்ருக்கு முன்னர் மாதத்தீட்டிலிருந்து சுத்தமாகின்றாள். பஜ்ருக்குப் பின்னர்தான் குளிக்கின்றாள். இவ்வாறே ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் பஜ்ரை அடைகின்றார். பஜ்ருக்குப் பின்னர்தான் குளிக்கின்றார். இவர்களின் நோன்பின் நிலை என்ன?
பதில்:
குறித்த பெண்ணின் நோன்பு சரியானதே! இவ்வாறே ஜுனுபுடைய நிலையில் நோன்பு நோற்பவரின் நோன்பு அங்கீகரிக்கப்படும். ‘நபி(ச) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் பஜ்ரை அடைவார்கள்; குளிப்பார்கள்; நோன்பு பிடிப்பார்கள்;’ (புஹாரி 1926) என்ற ஹதீஸும் இதையே கூறுகின்றது. பிரசவத்தீட்டுடைய பெண்ணும் இது விடயத்தில் மாதத்தீட்டுடைய பெண்ணின் நிலையிலேயே இருக்கின்றாள். அவள் பஜ்ருக்கு முன்னர் நிபாஸிலிருந்து விடுபட்டுவிட்டால் நோன்பை நோற்றுவிட்டு பின்னர் குளிக்கலாம். எனினும் பஜ்ருடைய தொழுகைக்காக விரைவாகக் குளித்துவிட வேண்டும். (அல் முனாஜ்ஜித்)
(தொடரும்)
தமிழாக்கம் (அபூ அப்னான்)

0 Comments