Ticker

6/recent/ticker-posts

Ad Code



குழந்தைகள் படிச்சதை மறக்காம இருக்க பாலோ பண்ண வேண்டிய 4 விஷயங்கள்!


குழந்தைகளுக்கு மிகப்பெரிய சொத்து கல்விதான். பெரும்பாலான குழந்தைகள் குறைந்த நேரம் படித்தாலும் அதை தெளிவாகப் புரிந்து படித்து தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். ஆனால், சில குழந்தைகள் மணிக்கணக்கில் படிப்பார்கள். ஆனால், தேர்வில் எதிர்பார்த்த அளவு மதிப்பெண் கிடைக்காது. காரணம், படித்ததை மறந்து விடுவதுதான். இது அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதோடு சோர்வடையவும் வைக்கிறது. இக்குழந்தைகள் கற்றதை மறக்காமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய 4  வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. புரிந்து படிக்க வைக்கவும்: மணிக்கணக்கில் குழந்தைகள் படித்துக்கொண்டே இருப்பது பெரிய விஷயமே அல்ல. அவர்கள் எப்படிப் படிக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம். அதாவது, குழந்தைகள் படிக்கும் பாடத்தை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்தால்தான் மறக்காமல் தேர்வில் எழுதி நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியும். புரியவில்லை என்றால் ஏதாவது எளிதான வார்த்தைகளை நினைவில் வைத்தோ அல்லது எளிய விஷயங்களை மனதில் வைத்தோ படிக்க முயற்சி செய்ய வேண்டும்.

2. நண்பர்களுக்கு சொல்லிக் கொடுப்பது: குழந்தைகள் படித்ததை மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொள்வதற்கு குழுவாக அமர்ந்து நண்பர்களுக்குப் படித்ததை சொல்லிக்கொடுக்கும்போதோ அல்லது அவர்களுக்குப் புரிய வைக்கும்போது தாங்கள் படித்த பாடம் மறக்கவே மறக்காது. ஆகவே, படித்ததை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

3. திரும்பப் படிக்கவும்: குழந்தைகள், நண்பர்களுக்கு சொல்லிக்கொடுக்கும்போதோ அல்லது படிக்கும்போது மறந்து விட்டால் திரும்பவும் படிக்க வேண்டும். இதைத் தவிர கூகுள் யூடியூப் போன்ற சோசியல் வீடியோக்கள் வாயிலாக அந்தப் பாடத்தை தெளிவாகப் புரிந்து படிக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில், சில குழந்தைகளுக்கு படிப்பதை விட, கேட்டால் எளிதில் புரிய ஆரம்பிக்கும். ஆகவே, இந்த வழியையும் குழந்தைகள் முயற்சி செய்து பார்த்து பயன் பெறலாம்.

4. மதிப்பாய்வு செய்ய வேண்டும்: குழந்தைகள் படித்தபோது அவர்கள் கற்றுக் கொண்ட விஷயங்கள் என்னென்ன? மற்றவர்களுக்கு எந்த அளவிற்கு சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பதனை வைத்து அவர்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும். இதனால் அவர்கள் படித்த பாடம் நினைவில் இருப்பதை தெரிந்துகொள்ள முடியும். இது அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்குவதற்கு உதவிகரமாக இருக்கும்.

மேற்சொன்ன 4 வழிமுறைகளும் குழந்தைகள் படிப்பதை மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும் என்பதனால் இவற்றைக் கடைபிடித்து நல்ல மதிப்பெண்கள் பெற வைப்போம்.

kalkionline


 



Post a Comment

0 Comments