தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்று கூறுவார்கள். இது முட்டைக்கும் பொறுந்தும். ஏனெனில் அவை உங்களுக்கு சிறந்த தோற்றத்தையும், பளபளப்பான முடியையும் தருவதோடு மட்டுமல்லாமல், உங்கள் மனநிலையை சந்தோஷப்படுத்தும்.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்று கூறுவார்கள். இது முட்டைக்கும் பொறுந்தும். ஏனெனில் அவை உங்களுக்கு சிறந்த தோற்றத்தையும், பளபளப்பான முடியையும் தருவதோடு மட்டுமல்லாமல், உங்கள் மனநிலையை சந்தோஷப்படுத்தும். ஒருவர் முட்டையை தினமும் ஏன் உட்கொள்ள வேண்டும், நம்முடைய ஆரோக்கியத்திற்கு முட்டை ஏன் நல்லது என்பதற்கான காரணங்கள் இதோ..
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பிய சக்தி: முட்டைகள் பல வைட்டமின்களை ஒன்றிணைத்து பல நன்மைகளைத் தருகின்றன. வைட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பயோட்டின் மற்றும் ஃபோலேட் ஆகியவை இதில் அடங்கும். இவை நோய் எதிர்ப்பு சக்திக்கும், எலும்புகளுக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
உயர்தர புரதம்: முட்டைகள் தசைகளைப் பராமரிக்கவும், திசுக்களை சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும் முட்டையின் மஞ்சள் மற்றும் வெள்ளைப் கருவில் ஒன்பது அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. முட்டையின் புரதம், அதன் உயர் உயிரியல் மதிப்புக்கு (BV) அறியப்படுகிறது. இது புரதத்தை உடல் எவ்வளவு திறமையாக பயன்படுத்துகிறது என்பதை அளவிடுகிறது. இவை எளிதில் ஜீரணமாகும்.
வயிற்றை நிறைவாக வைத்திருத்தல்: உடல் எடையை பராமரிக்கவும் அதிகப்படியான உணவு அல்லது தேவையற்ற நொறுக்குத் தீனிகள் சாப்பிடாமல் தடுக்கவும் முட்டை உதவுகிறது. பசியைக் குறைத்து, உணவு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவதில் முட்டை முக்கியமானது. ஜங்க் உணவுகளை சாப்பிடுவதற்குப் பதிலாக, உணவுக்கு பின்பான இடைவேளையில் ஒரு முட்டையை மென்று சாப்பிடுவது நல்லது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
தோல் மற்றும் முடி ஆரோக்கியம்: மென்மையான மற்றும் பொலிவான சருமம் உங்களுக்கு வேண்டுமானால், முட்டையை உட்கொள்வது நல்லது. லுடீன் மற்றும் புரோட்டீன் ஆகியவற்றால் செறிவூட்டப்பட்ட முட்டைகளை உண்பதன் மூலம் முடி வளர்ச்சிக்கு ஊட்டம் கிடைக்கிறது. மேலும் முட்டைகள் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சுருக்கங்கள், கோடுகள், கரடுமுரடான மற்றும் திட்டுத் தோல் மற்றும் சூரிய பாதிப்பு போன்ற வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. முட்டையில் உள்ள ஃபோலேட், புரோட்டீன்கள், பயோட்டின், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் காரணமாக கூந்தலுக்கு அடர்த்தியை சேர்க்கின்றன.
கோலின் மற்றும் ஒமேகா-3: முட்டையின் சிறந்த அம்சம் என்னவென்றால், அவற்றில் கோலின் மற்றும் ஒமேகா-3 அதிக அளவில் உள்ளது. ஆகையால் இதை 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் (முட்டையின் மஞ்சள் கருவை 7-8 மாதங்கள் முதல் 1 வயது வரை கொடுக்கலாம்) மற்றும் அனைத்து வயதினரும் உட்கொள்ளலாம். இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கண்கள், மூளை, இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்கு, கரு வளர்ச்சியை அதிகரிக்க முட்டைகள் ஒரு சிறந்த தேர்வாகும். ஏனெனில் அவை மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிப்பதைத் தவிர, கொலஸ்ட்ராலைக் கடத்துவதற்கும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் முட்டையில் உள்ள கோலின் பயனுள்ளதாக இருக்கும்.
கண் ஆரோக்கியத்திற்கு சிறந்தது: ஜியாக்சாண்டின், துத்தநாகம் மற்றும் லுடீன் போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் மிகுதியாகக் காணப்படும் சத்துக்களும் முட்டையின் மஞ்சள் கருக்களில் உள்ளன. முட்டை சாப்பிடுவது வயது தொடர்பான மாகுலர் சிதைவை (AMD) தடுக்க உதவும். முட்டையில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் பார்வை தொடர்பான பிரச்சினைகளுக்கு நன்மை பயக்கும்.
இருப்பினும், முட்டைகளை உட்கொள்ளும் போது, அவற்றை மிதமாக உட்கொள்வதோடு, உங்களுக்கு முட்டை ஒவ்வாமை இல்லை என்பதை உறுதிப்படுத்துவது முக்கியமாகும். குழந்தைப் பருவத்திலேயே முட்டைகளை அதிகமாக உட்கொள்வது முட்டை அலர்ஜியைக் குறைக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.
news18
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments