Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஒருபக்கம் போர் நிறுத்த ஒப்பந்தம்.. மறுபக்கம் தாக்குதல்.. காசாவில் 72 உயிர்களை காவு வாங்கிய இஸ்ரேல்!


பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய காசா போர் முடிவுக்கு வரும் என உலகே எதிர்பார்த்த நிலையில் இஸ்ரேல் புதிய குண்டைப் போட்டுள்ளது.

காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர ஹமாஸ் - இஸ்ரேல் இடையே நேற்று முன் தினம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் மூண்டது. இதில் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தரப்பில் பணயக்கைதிகளை ஹமாஸ் பிடித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பாலஸ்தீன மக்களுக்கான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை இஸ்ரேல் தடுப்பதாக ஹமாஸ் குற்றம்சாட்டியது. இந்தப் போரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று 15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்தது. இரண்டு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்பட்டது.

போர் நிறுத்தம் வரும் 19ம் தேதி அமலாகும் எனக் கூறப்பட்டது. இதனால், பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய காசா போர் முடிவுக்கு வரும் என உலகே எதிர்பார்த்த நிலையில் இஸ்ரேல் புதிய குண்டைப் போட்டுள்ளது.

மீண்டும் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து ஹமாஸ் வெளியேறவில்லை என இஸ்ரேல் கூறியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 72 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி அந்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கோரி டெல் அவிவ் நகரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

news18




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments