
இங்கிலாந்தின் ஷெபீல்ட் பகுதியில் சக மாணவனை கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயதுடைய மற்றமொரு மாணவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மொஹமட் உமார் கான் என்ற மாணவனே மரண தண்டனை தீர்ப்பிற்கு உள்ளாகியுள்ளார்.
இங்கிலாந்தின் சட்டங்களுக்கமைய அவரது தண்டனை தளர்த்தப்படுவதற்கு அவர் குறைந்தபட்சம் 16 வருடங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 3ம் திகதி ஷெபீல்ட் பகுதியிலுள்ள கத்தோலிக்க உயர் நிலைப் பாடசாலையில் மதிய போசன இடைவேளையின் போது ஹாவி வில்குஸ் என்ற 15 மாணவனின் மார்புப் பகுதியில் கத்தியால் குத்தி கொலை மொஹமட் உமார் கான் கொலை செய்துள்ளார்.
சக மாணவனை கொலை செய்துவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்லாத உமார் பொலிசார் வரும் வரை சம்பவ இடத்திலேயே இருந்துள்ளார். இதன்போது பொலிசாரிடம் உமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘தனது சிந்தனை சரியாக இல்லையெனவும், தன்னை தனது தாய் சரியாக கவனித்துக்கொள்ளவில்லை’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வில்குஸ் தன்னை அடிக்கடி கேலி செய்து வந்ததால் தனக்கு ஏற்ப்பட்ட மன அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாத பட்சத்தில் இந்த கொலையை செய்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதேவேளை இந்த வழக்கில் உமார் குற்றவாளி என கடந்த ஓகஸ்ட் மாதம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. எனினும் அதன் தீர்ப்பு நேற்றைய தினமே வெளியாகியுள்ளது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments