
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை, பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான மக்களை பாதித்துள்ளது.
இந்தோனேஷியா,தாய்லாந்த் மற்றும் இலங்கையில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்., மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
இந்தோனேஷியா
இந்தோனேஷியாவின் சுமாத்திரா தீவில் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கு 442 பேர் உயிரிழந்துள்ளனர்; 402 பேர் காணாமல் போயுள்ளனர்.
உணவு, தண்ணீர், மருத்துவ உதவி இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர்.
தொடர்பு வசதிகள்,சாலைகள், துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகள் தாமதமாகின்றன.
ஹெலிகாப்டர்கள் மற்றும் இராணுவக் கப்பல்கள் மூலம் உதவி அனுப்பப்பட்டாலும், பல பகுதிகளுக்கு இன்னும் உதவிகளை கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளன.
தாய்லாந்து
தாய்லாந்தில் 162 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்த் அரசு நிவாரணம் வழங்கி இருந்தாலும், உள்ளூர் அதிகாரிகள் flood response-இல் தவறுகள் செய்ததாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் விமர்சனங்களை எழுப்பியுள்ளனர்.
இலங்கை
இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் பேரழிவாக கருதப்படுகின்றது.
இங்கு டிட்வா புயல் தாக்கியதால், 334 பேர் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறன.
தற்காலிக முகாம்களில் 1.48 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நிலச்சரிவு காரணமாக சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தமதமாகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
மிகப்பெரிய இயற்கை பேரழிவை எதிர்கொண்டு வருகின்ற இந்தோனேஷியா, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் தற்போது .ஆயிரக்கணக்கான மக்களுக்கு உடனடி நிவாரணம், உணவு, தண்ணீர், மருத்துவ உதவி வழங்குவது அவசியமாகியுள்ளது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments