Ticker

6/recent/ticker-posts

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு!


168,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக  இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த ஏல விற்பனை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 43,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.

மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

tamilwin




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments