Ticker

6/recent/ticker-posts

"செல்வந்தர்கள் கையில் அதிகாரம்" - அதிபர் பைடன் கவலை


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) ஒருசில செல்வந்தர்களின் கைகளில் அதிகாரம் குவியும் அபாயம் குறித்து எச்சரித்திருக்கிறார். 

அது அமெரிக்க ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றார் அவர். 

அமெரிக்கர்கள் பொய்யான தகவல்களை எளிதில் நம்புவதாகத் திரு பைடன் குறைபட்டுக் கொண்டார். 

செய்தி நிறுவனங்களின் பேச்சு சுதந்திரம் குறைந்து வருவதாகவும் அவர் சொன்னார். 

திரு டோனல்ட் டிரம்ப் (Donald Trump) அதிபராகும் நேரத்தில் திரு பைடன் நாட்டு மக்களுக்கு அதிபராக அவருடைய கடைசி உரையை ஆற்றினார். 

திரு பைடன் அதிபராக ஒரு தவணை மட்டுமே இருந்தார். 

முதலில் ஜனநாயகக் கட்சி சார்பாக அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதாக இருந்தது. பிறகு அவருக்குப் பதில் துணையதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார்.  

2021ஆம் ஆண்டில் திரு பைடன் அதிபராகப் பொறுப்பேற்றார். 

அவர் அதிபராகப் பணியாற்றிய நாலாண்டில் அமெரிக்கா வலுவாகியிருப்பதாக அவர் சொன்னார். 

seithi




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments