Ticker

6/recent/ticker-posts

"அமைதியே சிறந்த மருந்து" - காஸா குறித்து உலகச் சுகாதார நிறுவனம்


காஸாவில் சண்டை நிறுத்தம் செய்ய இஸ்ரேலும் ஹமாஸும் இணக்கம் தெரிவித்திருப்பதை உலகச் சுகாதார நிறுவனம் பெரிதும் வரவேற்றுள்ளது.

BBC செய்தி அத்தகவலை வெளியிட்டது.

சண்டை நிறுத்தத்துக்குத் தேவையான ஆதரவை வழங்க நிறுவனம் தயாராக இருப்பதாகத் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Ghebreyesus) கூறினார்.

"காஸா சண்டை நிறுத்தமும் பிணையாளிகளை விடுவிக்கச் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தமும் வரவேற்கத்தக்கது. நிறைய உயிர்கள் பலியாகிவிட்டன. நிறையக் குடும்பங்கள் தவிக்கின்றன. எனவே இந்தச் சண்டை நிறுத்த உடன்பாட்டை மதித்து நிரந்தர அமைதியைக் கொண்டுவர அனைத்துத் தரப்பும் ஒத்துழைக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.

"அமைதியே சிறந்த மருந்து" என்று அவர் கூறினார்.

seithi




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments