
ஒக்டோபர் 2024 வாசிப்பது மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்கு பற்றி பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு உப்பு வெளி பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில், பிரதேச சபையின் செயலாளர் திருமதி.N.யாழினி தலைமையில் இடம் பெற்றது. இன் நிகழ்வில் மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் விருந்தினர்களின் சிறப்புரையும் இடம் பெற்றது.
போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறந்த செயற் திறனுடன் செயற்படும் சனசமூக நிலைய நூலகங்கள் மற்றும் சிறந்த வீட்டு நூலகங்கள் என்பனவுக்கும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

விருந்தினர்களாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு.N.மணிவண்ணன் அவர்களும் பிரதி உள்ளூராட்சி ஆணையாளர் திரு .S. பார்த்தீபன் அவர்களும் சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு P. தினேஷ் குமார் மற்றும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் ; உப்பு வெளி பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்; சனசமுக நிலைய ங்களின் நிர்வாகிகள்; நலன் விரும்பிகள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.
திருமலை நிஷா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments