Ticker

6/recent/ticker-posts

Ad Code



உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?


உடலில் சர்க்கரை அளவை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளாவிட்டால் பல பிரச்சனைகள் ஏற்படும் அவற்றில் சில இதோ:

1.  இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி அதிகரித்தால், இன்சுலின் தயாரிப்பு அல்லது செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இது நாள்பட்ட நோயாக மாறும்.

2. குறுகிய கால பாதிப்புகள்: சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகளவு தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், கண் பார்வை மங்குதல், சோர்வு மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் தோன்றும்.

3. கடுமையான சர்க்கரை அதிகரிப்பு காரணமாக உடல் கொழுப்பை எரித்து, இரத்தத்தில் கெட்ட அமிலங்கள் சேரும். இது உயிருக்கு ஆபத்தானது.

4. சர்க்கரை நோயால் இரத்த நாளங்கள் கடினப்படுவது, இதயம், ஸ்ட்ரோக் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆபத்து அதிகரிக்கும்.

5.  கைகள்/கால்களில் உணர்வு இழப்பு, வலி அல்லது செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.

6.  சிறுநீரகம் செயலிழக்கும் வரை படிப்படியாக சேதம்.

7. கண் பிரச்சினைகள் அதாவது பார்வை குறைதல் அல்லது குருட்டுத்தன்மை வரை.

8. கால் புண்கள் மற்றும் தோல் தொற்றுகள் ஏற்படும். சர்க்கரை அளவு அதிகரித்தால் காயங்கள் ஆறுவது தாமதமாகி, அழுகல்/தொற்று ஏற்படும்.

webdunia


 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments