Ticker

6/recent/ticker-posts

சரவாக்கைப் புதிய எரிசக்தி மையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் குறித்து ஜப்பானிய பிரதமருடன் நாளை விவாதிக்கப்படும்: பிரதமர் அன்வார்


சரவாக்கை நாட்டின் புதிய எரிசக்தி மையமாக மாற்றுவதற்கான திட்டம், நாளை ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவுடனான சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா இரு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக இன்று மலேசியா வருகின்றார். 

அதன்பின் அவருடன் சந்திப்பு நடத்தப்படும் என்று அன்வார் கூறினார்.

சரவாக் பிரிமியர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி ஓபெங் தலைமையிலான இந்தப் புதிய திட்டம், எரிசக்தி மாற்றத் துறையில் ஒரு முக்கியமான முயற்சி என்று அன்வர் கூறினார்.

முதலீடு, வர்த்தகம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து நாளை தாம் ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா விவாதிப்பதாக அன்வார் தெரிவித்தார். 

இந்த விவாதம் மலேசியா, குறிப்பாக சரவாக்கை எரிசக்தி மையமாக மாறுவதற்கான பாதையை வகுக்கும் என்று தாம் நம்புவதாகவும் அன்வார் மலேசிய பொருளாதார மன்றக் கூட்டத்தின் போது தனது உரையில் தெரிவித்தார்.

சரவாக் புதிய எரிசக்தி மையத்தில் ஒரு பெரிய சக்தியாக மாறுவதற்கான மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், இதனால் வெளிநாட்டு முதலீட்டு நம்பிக்கையை அதிகரிக்கிறது என்றும் அன்வார் முன்பு கூறியிருந்தார்.

nambikkai




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments